எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
  1. 6பச்சை கத்தரிக்காய்
  2. 1/4கப் சாம்பார் வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1/4கப் தேங்காய் துருவல் அல்லது துண்டுகள்
  5. 1டேபிள் ஸ்பூன் சீரகம்்
  6. 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  7. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/2 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  9. 1/4டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  10. 1/4டீஸ்பூன் சோம்புத்தூள்
  11. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. தேவையான அளவுகறிவேப்பிலை
  13. தேவையான அளவுபுளி
  14. தேவையான அளவுஉப்பு
  15. தாளிக்க:
  16. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  17. 1/4 டீஸ்பூன் கடுகு
  18. தேவையானஅளவு கறிவேப்பிலை
  19. 2வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    கத்தரிக்காயை நன்கு கழுவி காம்பு பகுதியை விட்டு விட்டு,முன் புறம் மட்டும் நறுக்கி (slit) தண்ணீரில் போட்டு வைக்கவும்.

  2. 2

    வெங்காயம்,தக்காளியை கறிவேப்பிலை,தேங்காய் துண்டுகளை எடுத்து வைக்கவும்.

  3. 3

    மசாலாப் பொருள்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  4. 4

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி,சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பின்னர் தயாராக வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து மேலும் கொஞ்சம் வதக்கவும்.

  6. 6

    சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து,தேங்காய் துண்டுகள் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  7. 7

    அரைத்த விழுதை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துள்ள கத்தரிக்காயில் ஸ்டுஃப் செய்யவும். ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.

  8. 8

    பின்னர் அரைத்த மசாலா விழுதை,கத்தரிக்காயில்
    ஸ்டஃப் செய்தது போக மீதி உள்ள மசாலாவை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஊற்றி கலந்து விடவும்.

  9. 9

    ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.

  10. 10

    கத்தரிக்காய் வெந்து கிரேவி எண்ணெய் பிரிந்து வரும்.அப்போது இறக்கினால் கத்தரிக்காய் கிரேவி தயார்.

  11. 11

    இப்போது எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.பின்னர் கடுகு,கறிவேப்பிலை,வெங்காயம் தாளித்து பௌலில் உள்ள கிரேவியில் சேர்க்கவும்.

  12. 12

    கத்தரிக்காய் கிரேவி சூடான சாதம்,இட்லி தோசையுடன் சேர்த்து சுவைத்திட மிகவும் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes