சிறு கீரை தண்டு சூப்

Sowmya
Sowmya @vishalakshi

#refresh2
சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 நபர்கள்
  1. 150 கிராம் சிறு கீரை தண்டு
  2. 3பல் பூண்டு
  3. 5சின்ன வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/2 டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
  7. 1/2 டேபிள்ஸ்பூன் சீரகத் தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவு தண்ணீர்
  10. தாளிக்க
  11. 2 டீ ஸ்பூன் எண்ணெய்
  12. 1சிறிய துண்டு பட்டை
  13. 2 கிராம்பு
  14. 1டீ ஸ்பூன் சோம்பு
  15. 1/2 டீ ஸ்பூன் சீரகம்
  16. 1கொத்து கருவேப்பில்லை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    150 கிராம் சிறுகீரை தண்டுகளை தண்ணீரில் நன்றாக இரண்டு முறை அலசி விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் நாம் அலசி எடுத்துள்ள சிறுகீரை தண்டுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்

  3. 3

    அதனுடன் மூன்று பல் தோலுரித்த பூண்டு 5 தோல் உரித்த சின்ன வெங்காயம் ஒரு சிறிய தக்காளி ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    பிறகு அதனுடன் கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி 5 விசில் வரை விடவேண்டும்

  6. 6

    குக்கரில் ஆவி அடங்கியவுடன் அதை திறந்து பார்க்கவும்...இதோ சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான கீரை தண்டு சூப் தயார் இதனை நாம் வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம்

  7. 7

    சூப் தாளிப்பதற்கு ஒரு கடாயில் 2 டீ ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் அதில் ஒரு சிறிய துண்டு பட்டை 2 கிராம்பு 1/2 டீ ஸ்பூன் சீரகம் 1 டீ ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து பொரிய விட வேண்டும்

  8. 8

    பிறகு அதில் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அதனை நாம் தயாரித்து வைத்திருக்கும் கீரைத்தண்டு சூப்பில் சேர்க்கவேண்டும்

  9. 9

    இதோ மிகவும் சுலபமான மிகவும் சுவையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்திருக்கும் கீரை தண்டு சூப் தயார் வாங்க சுவைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes