மணத்தக்காளி கீரை துவரம் பருப்பு கூட்டு

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#COLOURS2
பச்சை வண்ண உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1கட்டு மணத்தக்காளி கீரை
  2. 1/4கப் துவரம் பருப்பு
  3. 10சின்ன வெங்காயம்
  4. 8பல் பூண்டு
  5. 1டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தாளிக்க:
  10. 2டீஸ்பூன் ஆயில், நெய்
  11. 1டீஸ்பூன் கடுகு
  12. 1/2 டீஸ்பூன் சீரகம்
  13. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  14. 1வரமிளகாய் கிள்ளியது

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    1கட்டு மணத்தக்காளிக் கீரையை வாங்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.10 சின்ன வெங்காயம், 8 பல் பூண்டு தோல் நீக்கி கழுவி, பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1வரமிளகாய் கிள்ளியது சேர்த்து பொன்னிறமாக தாளித்து, அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி விடவும்.1/4 கப் துவரம் பருப்பை குக்கரில் 3 விசில் விட்டு, வேக வைத்து எடுத்து வைக்கவும்.

  3. 3

    சின்ன வெங்காயம் பூண்டு நன்கு வதங்கியவுடன், அதனுடன் கீரையை சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு வேகவிடவும்.1/2 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக விடவும்.

  4. 4

    தண்ணீர் வற்றி கீரை நன்கு வெந்தவுடன், வெந்த துவரம் பருப்பை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

  5. 5

    1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து, கலக்கி இறக்கி விடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். சுவையான மணத்தக்காளி கீரை துவரம்பருப்பு கூட்டு ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes