தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
  1. 1.5 கப் மைதா மாவு(அல்லது கோதுமைமாவு)
  2. 1/2 கப் வெள்ளை ரவை(விருப்பப்பட்டால் சேர்க்க)
  3. 3/4 கப் சர்க்கரைதூள்
  4. 1/4ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. 1/4ஸ்பூன் உப்பு
  6. தேவையான அளவுதண்ணீர்
  7. 2 ஸ்பூன் நெய்
  8. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவிற்கு, பாதி அளவு தூள் செய்த சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதாவது 1.5கப் மாவிற்கு 3/4கப் சர்க்கரை தூள்.இது அளவான இனிப்பு கொடுக்கும்.

    இனிப்பு அதிகம் வேண்டும் எனில் சர்க்கரையின் அளவைக் கூட்டிக் கொள்க.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவு,சர்க்கரை தூள், ரவை, ஏலக்காய் தூள், நெய்,உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மிகவும் சாப்டாக பிசைய கூடாது.மாவு கொஞ்சம் கெட்டிப் பதத்தில் இருந்தால் நல்லது.

  4. 4

    இனி சப்பாத்தி உருட்டுவது போல், கொஞ்சம் தடிமனாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

  5. 5

    மிகவும் மெல்லிதாக உருட்டினால்,சாப்பிடும் பொழுது கடுகடுவென்று இருக்கும் எனவே கொஞ்சம் தடிமனாக இருக்கட்டும்.

  6. 6

    தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளலாம். குழந்தைகளை கவரும் வகையில் ஏதேனும் வடிவங்கள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  7. 7

    இனி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பொரித்து எடுக்கும் பொழுது மொறு மொறுப்பாக இருக்காது.ஆறிய பிறகு மொறுமொறுப்பாக இருக்கும்.

  8. 8

    அவ்வளவுதான் சுவையான மொறுமொறுப்பான டைமண்ட் பிஸ்கட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes