ஆலு பன்னீர் ஃபிங்கர்ஸ்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

ஆலு பன்னீர் ஃபிங்கர்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 300 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கு
  2. 200 கிராம் துருவிய பன்னீர்
  3. 1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  4. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1/2 கப் பிரெட் தூள்
  9. 1/4 கப் மைதா + 1/4 கப் தண்ணீர்
  10. 1 கப் பிரெட் தூள்
  11. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கு துருவிய பனீர் கரம் மசாலா மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    கலந்த கலவையில் இருந்து சிறு உருண்டை எடுத்து நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும் இதேபோல அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்

  3. 3

    மைதா மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி சிறுது தண்ணீர் போல் கரைத்துக்கொள்ளவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு பன்னீரை இதில் தோய்த்து பிரெட் தூளில் எல்லா பக்கங்களிலும் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    இதேபோல் அனைத்தையும் தயாரித்து கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதிக மற்றும் மிதமான தீயில் இவைகளை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்

  5. 5

    ஆலு பன்னீர் ஃபிங்கர்ஸ் தயார் இதனை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes