உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#friendshipday @vijiprem24 இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 3உருளைகிழங்கு
  2. 100 கிராம் பச்சை பட்டாணி
  3. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
  4. ஒரு ஸ்பூன் சீரக தூள்
  5. ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  6. பெருங்காய தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. ஒரு ஸ்பூன் மைதா மாவு
  9. ஒரு ஸ்பூன் கான் பிளவர் மாவு
  10. அரை பாக்கெட் சேமியா
  11. கொத்தமல்லி இலை
  12. அலங்கரிக்க
  13. சிறிதளவுபுதினா
  14. முட்டை செய்ய
  15. 1வேக வைத்து மசித்த உருளைகிழங்கு
  16. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் 3 உருளைக்கிழங்கு, 100 கிராம் பச்சை பட்டாணியை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.எடுத்த பிறகு ஒரு பௌலில் போட்டு அதை இரண்டையும் மசித்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    மசித்த பின் அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் masala, ஒரு ஸ்பூன் சீரக தூள்,கால் ஸ்பூன் உப்பு, சிறிதளவு பொருங்காய தூள், கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிசைந்த பின், மற்றொரு பௌலில் ஒரு ஸ்பூன் மைதா, ஒரு ஸ்பூன் சோள மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இன்னொரு தட்டில் அரை பாக்கெட் சேமியாவை எடுத்து கைகளால் நசுக்கி சிறிது சிறிதாக உடைத்து கொள்ளவும்

  4. 4

    அடுத்து பிசைந்த உருளைக்கிழங்கு மசாலாவில் இருந்து சிறு பகுதியை எடுத்து உருண்டையாக உருட்டி அதன் நடுவில் ஓட்டை போட்டு ஒரு பறவையின் கூடு போல் செய்து கொள்ளவும்

  5. 5

    பறவையின் கூடு பொல் செய்த பின், அதை மாவு கலவையில் முல்கி எடுத்து கொள்ளவும், எடுத்த பிறகு சேமியாவில் உருட்டி கொள்ளவும்.

  6. 6

    அடுத்து அதை எண்ணெயில் போட்டு கரண்டியின் உதவின் கொண்டு எண்ணெயை பறவை கூடு வடிவின் மேல் தெளித்து விட்டு தெளித்து விட்டு திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

  7. 7

    அடுத்து அதை இன்னும் அலங்கரிக்க பெரித்ததின் மேல் புதினா இலை வைக்கவும்.

  8. 8

    புதினா இலை வைத்த பிறகு மற்றொரு பௌலில் சிறிதளவு வேக வைத்த உருளைகிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலந்த பிறகு அதில் ஒரு பகுதியை சிறிதளவு எடுத்து முட்டை வடிவில் உருட்டி கொள்ளவும். உருட்டிய பின் அதை புதினா இலையின் மேல் வைக்கவும்

  9. 9

    அவ்ளோதான்
    ருசியான உருளைக்கிழங்கு பறவை கூடு ஸ்நாக்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes