சீசி வெஜ் லசான்யா

#milk
பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஓவன் உபயோகப்படுத்தாமல் சுலபமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் லசான்யா செய்முறையை விளக்கியுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
மாவு தயாரிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதனை மூடி போட்டு 30 நிமிடம் வைக்கவும்.
- 2
அடுப்பில் பேண் வைத்து வெண்ணெய் சேர்க்கவும். சூடானதும் குறிப்பிட்டுள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து அதிகமான தீயில் 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- 3
அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் மெலிதாக நறுக்கிய பூண்டு சேர்த்து அதிகமான தீயில் வதக்கவும். வாசனை வர வதங்கியதும் வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும் இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு வேக வைத்த காய்கறிகள், மிளகுத்தூள், ஒரிகநோ மற்றும் பேசில் இலைகளை சேர்த்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- 4
வைட் சாஸ் தயாரிக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் பால் சேர்க்கவும் தீயை குறைத்து துருவிய சீஸ் சேர்த்து கை விடாமல் கலந்துவிடவும் கூடவே மிளகுத்தூள் சேர்த்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- 5
ஊறிய மாவை லேசாக தேய்த்து படத்தில் காட்டியுள்ளபடி மடித்துக் கொள்ளவும். அதன்பிறகு வர மாவு தூவி மெல்லிதாக விரித்துக் கொள்ளவும்.
- 6
இதன் மேல் நாம் எடுத்திருக்கும் மோல்டு வைத்து சீட்களை வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டிய லசான்யா சீட்களை வரை மாவு தூவி காதுபட 15 நிமிடம் காய வைக்கவும்.
- 7
டின்னில் வெண்ணை தடவி கொள்ளவும். முதலில் காய்கறி கலவையை பரப்பிக் கொள்ளவும். அதன்மேல் லசான்யா ஷீட் வைக்கவும். அதன் மேல் துருவிய செடார் மற்றும் மோஜரெல்லா சீசை சேர்த்துக் கொள்ளவும். இதே முறையைப் பின்பற்றி அனைத்தையும் வைக்கவும். இறுதியில் மேலே வைட் சாஸ் ஊற்றி அதன் மேல் கொஞ்சம் சிப்ஸ் மற்றும் பிரெட் கிரம் செய்துவரும்.
- 8
அடுப்பில் ஒரு பெரிய அகலமான பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் சூடு செய்யவும். அதற்குள் ஒரு ஸ்டார் வைத்து அதன் மேல் பேக்கிங் வைக்கவும். இதனை மூடி போட்டு மிதமான தீயில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு விருப்பமான அளவில் வெட்டிக் கொள்ளவும்.
- 9
மிக மிக ருசியான இந்த லசான்யா பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் சீஸ் வகைகளை கொண்டு செய்யப்படுவதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது. ஹோட்டல் சுவையில் நம் வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம். நீங்களும் இந்த ஆரோக்கியமான உணவை முயற்சித்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
-
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
கோதுமை மாவு மேக்ரோனி இன் ஒயிட் சாஸ் (kothumai maavu macaroni in white sauce recipe in tamil)
பொதுவாக கடையில் வாங்கும் பாஸ்தா மைதா வினால் தான் செய்யப்பட்டு இருக்கும். அது குழந்தைகள் சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் மேக்ரோனி வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு எளிமையாக செய்யும் முறையை இந்த ரெசிபியில் நீங்கள் காணலாம். இதில் நான் கோதுமை மாவைப் பயன்படுத்தி தான் ஒயிட் சாஸ்சும் செய்துள்ளேன். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
வாழைக்காய் சீசி க்யூப்ஸ்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி ஹோட்டல் சுவையில் ஒரு அருமையான சீசி க்யூப்ஸ் தயாரிக்கும் முறையை பகிர்ந்து உள்ளேன். இதை செய்து பாருங்கள் யாரும் வாழைக்காயில் செய்தது என்று கண்டுபிடிக்கவே மாட்டார்கள். மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா
#hotelஇன்றைக்கு நாம் எந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சுலபமாக வெஜிடபிள் பிஸ்சா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பாப்போம். Aparna Raja -
-
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது. Asma Parveen -
-
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட் (2)