'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in

இது என் அம்மா சொல்லிக் கொடுத்தது.
"குழம்பு கூட்டுதல்" என்பது தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளி கரைசல் மற்றும் மசாலா கலந்து விடுவார்கள். இதற்குதான் 'குழம்பு கூட்டுதல்' என்று பெயர்.
கூட்டிய குழம்பபை கொதிக்க வைத்து, கொதித்த பிறகு,அந்தந்த குழம்பு வகைகளுக்கு ஏற்ற மாதிரி காய்கறிகளை சேர்ப்பார்கள்.
'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in
இது என் அம்மா சொல்லிக் கொடுத்தது.
"குழம்பு கூட்டுதல்" என்பது தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளி கரைசல் மற்றும் மசாலா கலந்து விடுவார்கள். இதற்குதான் 'குழம்பு கூட்டுதல்' என்று பெயர்.
கூட்டிய குழம்பபை கொதிக்க வைத்து, கொதித்த பிறகு,அந்தந்த குழம்பு வகைகளுக்கு ஏற்ற மாதிரி காய்கறிகளை சேர்ப்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவல், 10-12சின்ன வெங்காயம், சீரகம் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 2
முதலில்,குழம்பு கூட்ட வேண்டும்.
கடாயில், குழம்பிற்கு எவ்வளவு தேவையோ அதற்கு கூடுதலாக இன்னொரு மடங்கு தண்ணீர் சேர்த்து, அந்த தண்ணீரில், அரைத்த விழுது,குழம்பு மிளகாய்த்தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
அடுப்பை ஆன் செய்து,இந்த கலவையை கொதிக்கவிடவும்.
- 4
நன்றாக கொதித்ததும் (4 முழு)பூண்டு பற்களையும்,மீதி உள்ள சின்ன வெங்காயம், நறுக்கிய 2 தக்காளி அனைத்தையும் சேர்க்கவும்.
பூண்டு பற்கள் வறுத்தும் சேர்க்கலாம்.
- 5
இவை அனைத்தையும் நன்றாக கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும்.
- 6
குழம்பு காய்ந்ததும் இறக்கவும். அதாவது
குழம்பில் தண்ணீர் வற்றி,கெட்டியானால் தான் கரண்டியில் ஒட்டும். ஒட்டவில்லையெனில் குழம்பு இன்னும் ரெடி ஆகவில்லை என்று பொருள். - 7
பின், வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி,கடுகு, உளுந்து வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் கொட்டவும்.
குழம்பில் 'வெந்தயம் வாசம்' கமகம வென்று இருக்கும்.
- 8
அவ்வளவுதான். சுவையான பூண்டு குழம்பு ரெடி.
இந்த குழம்பிற்கு முட்டைக்கோஸ்,பீன்ஸ், கேரட் பொரியல்,அப்பளம்,வேக வைத்த முட்டை, இவை அனைத்தும் நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌
#pms family. முருங்கைகாய் பொரிச்ச குழம்பு அற்புதமான சுவையில் அருமையாக 👍செய்ய கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கி நறுக்கிய. முருங்கைகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மஞசள்தூள் உப்பு கலந்து மூன்று நிமிடம் வேக வைக்கவும் பிறகு புளி தண்ணீர் கொஞ்சமாக கலந்து ஊற்றிவேக வைத்து தேங்காய் பூண்டு சீரகம் அரைத்த கலவையில் குழம்பு மிளகாய்தூள் கலந்து குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைவாசனைபோனவுடன் ஆயில் பிரிய குழம்பு அட்டகாசமான சுவையில் சாதத்திற்கு சூப்பர் 👌அந்த டேஸ்டியான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள். பார்த்தால் மட்டும் போதாது செய்து சுவைத்து பார்த்தால் அதன் அருமை தெரியும் அனைவரும் செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள்சூப்பராக 👌👌👌 Kalavathi Jayabal -
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
#DG அம்மா வெந்தய குழம்பு செய்தால் வீடு முழுவதும் மணக்கும். மிகவும் எளிய முறை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. வெங்காயம் பூண்டு வாசனை மேந்திய வாசனையை மறைக்கும் என்பது என கருத்தும் கூட. அம்மா தக்காளி சேர்பதில்லை. அம்மா கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, என் குழம்பிலும் சேர்த்தேன். புளி கூட தக்காளி சேர்த்தேன். கரிவேப்பிலைக்கு இன் தோட்டத்தில் பஞ்சமில்லை. காய்கறி கூடைக்காரியை கொசுறு கேட்க வேண்டியதில்லை. பலே ஜோரான சுவையான மணமான வெந்திய குழம்பு செய்தேன். #DG Lakshmi Sridharan Ph D -
மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்
#combo 1இட்லி சாம்பார் செய்ய முதலில் குக்கரில் சுத்தம் செய்த. பருப்பு சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து கடைந்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயம் வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து கரைத்த புளிகரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து கடைந்த பருப்பை ஊற்றி மஞசள்தூள் உப்பு போட்டு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இட்லி சாம்பார் மணக்க சூப்பர் தேவைபட்டால் வெல்லம் சிறிது சேர்க்கலாம்சாம்பார் சுவையோடு இருக்கும் போது இட்லி சாப்பிட தூண்டும் நமக்கு நன்றி 🙏 Kalavathi Jayabal -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
-
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும். Vijayalakshmi Velayutham -
சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌
#pms familyமண்சட்டியில் மணக்கும் துவரம் பருப்பு குழம்பு செய்ய குக்கரில் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக விடவும் பிறகு பருப்பை கடைந்து மண்சட்டியில் ஊற்றி அதோடு தேங்காய் பூண்டு சீரகம் கறிவேப்பிலை சின்னவெங்காயம் அரைத்து ஊற்றிகொதிக்க விட்டு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் கற்வேப்பிலை வரமிளகாய் தாளித்து கொட்டி மூடி ஒருநிமிடம் வைத்து இறக்கினால் சுவையாண டேஸ்டியான பருப்பு குழம்பு வெண்டைக்காய் பொரியல் வைத்து சாப்பிடும் போது என்னா ருசி சூப்பர் நன்றி Kalavathi Jayabal -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
-
துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
-
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira
More Recipes
- கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil
- கல்யாண சாம்பார்
- தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
- சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)
- புளிக்காய்ச்சல் / pulikachal Recipe in tamil
கமெண்ட்