அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vattaram #week15
எப்போவும் செய்யும் மட்டன் குருமாவை விட இது வித்தியாசமான மட்டன் குருமா இதில் காய்கறிகள் அனைத்தும் இருப்பதால் ஆரோக்கியமும் கூட

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ மட்டன்
  2. 2நறுக்கிய வெங்காயம்
  3. 2நறுக்கிய தக்காளி
  4. 1 நூகள்
  5. 2உருளைக்கிழங்கு
  6. 1முள்ளங்கி
  7. 1 முருங்கைக்காய்
  8. 12 பச்சை மிளகாய்
  9. 1/2 மூடி தேங்காய்
  10. 1/2 மேஜை கரண்டி மஞ்சள்
  11. ஒன்றரை மேஜை கரண்டி மிளகாய் தூள்
  12. சிறிதளவுகல்பாசி
  13. 1/2 இன்ச் பட்டை
  14. 2 மராத்தி முக்
  15. 1/2 மேசைக்கரண்டி சோம்பு
  16. 4 கிராம்பு
  17. 2 ஏலக்காய்
  18. 1 அன்னாசிப் பூ
  19. 2மேசை கரண்டி இஞ்சி பூண்டு விழுதுகள்
  20. 1/2 மேஜை கரண்டி கசகசா
  21. தேவையானஅளவு உப்பு
  22. 3 குழிக்கரண்டி எண்ணெய்
  23. சிறிதுஅளவு கறிவேப்பிலை
  24. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதுகள், மஞ்சள் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று அல்லது நான்கு விசில் வரை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய் கசகசா எல்லாவற்றையும் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும், மட்டன் நன்கு வெந்ததும் தனியாக வைத்து விட வேண்டும் ஒரு கனமான கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி மசாலாக்கள் எல்லாவற்றையும் சேர்க்கவேண்டும், கலக்கல் பொரிந்ததும் வெங்காயத்தையும் கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்

  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்க்க வேண்டும், பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் தக்காளி நன்கு வதங்கியதும் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்

  4. 4

    பின் மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும், வேக வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும் அடுத்ததாக அரைத்து வைத்திருக்கும் தேங்காய் இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட வேண்டும்

  5. 5

    தண்ணீர் விட்டு ஒரு தட்டு போட்டு மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும், நன்கு கொதித்ததும் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும்

  6. 6

    சுவையான மட்டன் குருமா யார், இந்த மட்டன் குருமாவை தோசை இட்லி சப்பாத்தி, பரோட்டா, பூரி மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
NiceHello dear 🙋
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes