மூங்தால் லட்டு

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு 30 லட்டு வந்தது.பயத்தம் பருப்பை வறுத்து செய்த ரெசிபி இது.உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது இந்த லட்டு.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நெய்யை பயன்படுத்துவதால் கூடுதல் ருசி.பசு நெய்யில் செய்தால் ருசியோ ருசி. #Kj

மூங்தால் லட்டு

ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு 30 லட்டு வந்தது.பயத்தம் பருப்பை வறுத்து செய்த ரெசிபி இது.உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது இந்த லட்டு.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நெய்யை பயன்படுத்துவதால் கூடுதல் ருசி.பசு நெய்யில் செய்தால் ருசியோ ருசி. #Kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 1கப்பயத்தம் பருப்பு
  2. 3/4கப்சர்க்கரை
  3. 5ஏலக்காய்
  4. 1/4 கப்நெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    வெறும் கடாயில் பயத்தம் பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்க்கவும்.பிறகு மைய அரைக்கவும்.

  3. 3

    ஆற வைத்த பயத்தம் பருப்பை மிக்ஸியில் போடவும்.இதையும் மைய அரைக்கவும்.

  4. 4

    அரைத்த சர்க்கரை,மாவு இரண்டையும் ஒன்றாக போடவும்.பின்பு நன்கு கலந்து கொள்ளவும்.இரண்டையும் சல்லடையில் போடவும்.

  5. 5

    பின் நன்கு சலிக்கவும்.நெய்யை நன்கு உருக்கவும்.உருக்கின நெய்யை மாவில் சிறிது ஊற்றவும்.

  6. 6

    பிடிக்கும் பதம் வந்ததும் மீத நெய்யையும் ஊற்றவும்.இளஞ் சூட்டிலேயே உதிரா வண்ணம் கெட்டியாக உருண்டைகளை பிடித்து தட்டில் வைக்கவும்.

  7. 7

    பிறகு கிண்ணத்தில் போடவும்.சூப்பரான,சுவையான,சத்தான,*மூங்தால் லட்டு*தயார்.

  8. 8
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes