பனீர் டிக்கா மசாலா(paneer tikka masala recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

பனீர் டிக்கா மசாலா(paneer tikka masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. ஊற வைக்க :
  2. 400கிராம் பனீர் சதுரமாக கட் செய்தது
  3. 1பெரிய வெங்காயம் சதுரமாக கட் செய்தது
  4. 1 குடைமிளகாய் சதுரமாக கட் செய்தது
  5. 1டீஸ்பூன் உப்பு
  6. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1டீஸ்பூன் தனியாத்தூள்
  8. 2/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  9. 1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. அரைக்க:
  11. 2டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  12. 150 கிராம் பெரிய வெங்காயம் பெரிய சதுரமாக கட் செய்தது
  13. 300கிராம் பெங்களூர் தக்காளி கட் செய்தது
  14. 1 கருப்பு ஏலக்காய்
  15. 2 ஏலக்காய்
  16. 1பிரிஞ்சி இலை
  17. 4 இலவங்கம்
  18. 2டீஸ்பூன் சோம்பு
  19. 2 டீஸ்பூன் தனியா தூள்
  20. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  21. 1டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  22. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  23. 1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  24. தேவையானஅளவு உப்பு
  25. 1இன்ச் அளவு இஞ்சி
  26. 10பல் பூண்டு
  27. 10முந்திரி
  28. க்ரேவி செய்ய :
  29. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  30. 2டீஸ்பூன் வெண்ணெய்
  31. 1டீஸ்பூன் கசூரிமேத்தி
  32. 2டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
  33. 1டேபிள் ஸ்பூன் தேன்
  34. 4டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பனீரிலிருந்து கரம் மசாலா தூள் வரை உள்ள பொருட்களை கலந்து 10 நிமிடங்கள் ஊற விடவும்

  2. 2

    குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம் முதல் முந்திரி வரை உள்ள பொருட்களை 2 நிமிடம் வதக்கி 100மில்லி தண்ணீர் ஊற்றி 1விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    ஆறின பின் அரைத்து வடிகட்டவும்

  4. 4

    ஒரு நான் ஸ்டிக் பேனில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஊறிய பனீரை லேசாக வறுத்து எடுக்கவும். பின்னர் அதே பேனில் ஊறிய குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்

  5. 5

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வேக வைத்து எடுத்த வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி, வடிகட்டி வைத்த மசாலாவை ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பு சிம்மில் வைக்கவும்

  6. 6

    இதனுடன் தேன், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம், கசூரிமேத்தி சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்

  7. 7

    இதில் பனீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes