நெல்லிடை மோர் (Nellidai mor recipe in tamil)

#nutrient3 #family #book
நெல்லிடை மோர்.இது பெரு நெல்லிக்காய் மற்றும் புளித்த தயிர் கொண்டு செய்யும் முறையாகும். என் கணவர் வீட்டார் பக்கம் அனைவர் வீட்டிலும் நெல்லிக்காய் சீசன் பொழுது இதை கட்டாயம் செய்வார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் இது மிகவும் பிடிக்கும். மிக மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.சுவையாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் மோரில் உள்ள நல்ல பலன்கள் மற்றும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சத்துகள் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.
நெல்லிடை மோர் (Nellidai mor recipe in tamil)
#nutrient3 #family #book
நெல்லிடை மோர்.இது பெரு நெல்லிக்காய் மற்றும் புளித்த தயிர் கொண்டு செய்யும் முறையாகும். என் கணவர் வீட்டார் பக்கம் அனைவர் வீட்டிலும் நெல்லிக்காய் சீசன் பொழுது இதை கட்டாயம் செய்வார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் இது மிகவும் பிடிக்கும். மிக மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.சுவையாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் மோரில் உள்ள நல்ல பலன்கள் மற்றும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சத்துகள் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரைகிலோ நெல்லிக்காயை கழுவி நன்றாக துடைத்து கொள்ளவும். ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் நெல்லிக்காய் முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் நெல்லிக்காயை அதில் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மூடி போட்டு வேகவிடவும். நெல்லிக்காய் வெந்து விட்டால் மேல் தோல் சுருங்கி வெடிப்பு வரும். நிறம் மாறும்.கையில் உடைத்து விட்டால் நன்கு உடையும்.
- 2
இப்போது ஒரு லிட்டர் அளவு புளித்த தயிரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 15 பச்சை மிளகாயை நன்கு கழுவி விட்டு மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.(பச்சையாக)
- 3
இப்போது ஒரு தாளிக்கும் கரண்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்த இவற்றை அரைத்த பச்சை மிளகாயுடன் கடைந்த மோரில் சேர்க்கவும்.
- 4
பிறகு வெந்த நெல்லிகாயை ஆறவைத்து ஒன்றிரண்டாக உதிர்த்துக் கொள்ளவும். தாளித்த மோரில் இவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும். உப்பு போதுமா என்று சரி பார்த்துக் கொள்ளவும். ஆறியவுடன் ஒரு பாட்டிலுக்கு மாற்றி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையானபோது சாம்பார், ரசம் சாதம், மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். மேலும் இதிலுள்ள மோரை இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
- 5
இந்த நெல்லிடை மோர் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை மோர் குழம்பு.(mor kuzhambu recipe in tamil)
#ed3 # இஞ்சிஇந்த தயிர் பச்சடி புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். செய்வதற்கு அதிக நேரம் செலவு ஆகாது. தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்துக்கொண்டால் ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம் .சாதத்திற்கு தொட்டுக் கொள்வதற்கு, சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட மற்றும் சப்பாத்தி பூரி நான், குல்சா, பராட்டா போன்ற ஐட்டங்களுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
மோர் களி (Morkali recipe in tamil)
#arusuvai4என் அம்மா செய்யும் பிரமாதமான, சுவையான உணவு இந்த மோர் களி.என் அக்கா அவர்களிடம் செய்முறை கேட்டு முதன் முறையாக செய்கிறேன். நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். புளித்த மோர் மற்றும் அரிசி மாவு கொண்டு செய்ய வேண்டும். Meena Ramesh -
-
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
-
மசாலா மோர் (Masala mor recipe in tamil)
மிகவும் ருசியான உடலுக்கு குளிர்ச்சியானது #GA4#week7#buttermilk Sait Mohammed -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
அரை நெல்லிக்காய் மசாலா மோர்
#GA4 #WEEK11சுலபமான மற்றும் சுவையான நெல்லிக்காய் மசாலா மோரின் செய்முறையைப் பார்க்கலாம் Poongothai N -
-
பெரிய அமராந்த்/ Pedda Usirikaya (Periya amaranth recipe in tamil)
#ap பெரிய அமராந்த் என்பது பெரும் நெல்லிக்காய் ஊறுகாய் ஆகும்.பெரும் நெல்லிக்காய் ஒரு ஆப்பிள்க்கு சமம்.வாரம் ஒரு முறையாவது பெரிய நெல்லிக்காய் சாப்பிட்ட வேண்டும்.ஆந்திரா மிக முக்கியமான ஒன்று ஊறுகாய் ஆகும். Gayathri Vijay Anand -
-
கண் பார்வைக்கு உகந்த நெல்லிக்காய் காரட் வெள்ளரிக்காய் சாதம்(amla carrot and cucumber rice recipe)
#ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் இன்று கண் பார்வைக்கு மிகவும் நல்ல காய்கறிகளான நெல்லிக்காய் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. வீட்டில் வெள்ளரிக்காய் கேரட் மற்றும் நெல்லிக்காய் இருந்தது.வீட்டில் இருப்பதை கொண்டும் நாம் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து குழந்தைகளுக்கு மற்றும் நமக்கும் பெரியவர்களுக்கும் தயாரிக்கலாம். குடும்பம் நலம் பேணுவது நம் கடமை. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல ஆரோக்கியமே வளமான வாழ்க்கைக்கு பிரதானம். Meena Ramesh -
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
-
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
மசால் தோசை (Masal dosai recipe in tamil)
#familyமசால் தோசை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. Soundari Rathinavel -
-
-
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #book #mango Sarojini Bai -
81.நெல்லிக்காய் ஊர்காய் (கோசஸ்பெரி ஊர்காய்)
அற்புதம் மற்றும் சுவையானது. தயிர் அரிசி சிறந்தது. Chitra Gopal -
-
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
சிம்பிள் வீட்டு மோர் (Simple veetu mor recipe in tamil)
# GA4# WEEK 7# Butter milkஜீரணத்திற்கு மிகவும் ஏற்றது Srimathi -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)