பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2கப் வட்டமாக அரிந்த பாகற்காய்
  2. 1கப் வேக வைத்த வெள்ளை சின்ன கொண்டைக்கடலை
  3. 1கப் பச்சை சுண்டைக்காய் தட்டியது
  4. 1எலுமிச்சை அளவு புளி
  5. சிறியவெங்காயம் 10 லிருந்து 12
  6. அரைக்க
  7. 10பல் பூண்டு
  8. 5லிருந்து 6 சிறிய வெங்காயம்
  9. 1ஸ்பூன் கசகசா
  10. 1/4கப் தேங்காய் துருவல்
  11. 3 ஸ்பூன் சாம்பார் தூள்
  12. 1ஸ்பூன் வரமல்லித் தூள்
  13. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1/2ஸ்பூன் கடலைப்பருப்பு
  15. 1/4ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  16. 2வர மிளகாய்
  17. 1/4ஸ்பூன் மிளகு
  18. 1/2ஸ்பூன் சீரகம்
  19. தேவையான அளவுஉப்பு
  20. அரிசி கழுவிய தண்ணீர்
  21. தாளிக்க
  22. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  23. 1ஸ்பூன் கடுகு
  24. 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  25. 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள்
  26. 2 வரமிளகாய்
  27. சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி
  28. 1டேபிள்ஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பச்சை சுண்டைக்காயை தட்டிகழுவி விதை நீக்கி கொள்ளவும். வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஆறு அல்லது ஏழு சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பாகற் காயை வட்ட வடிவமாக அரிந்து அரிசி கழுவிய தண்ணீரில் சிறிது நேரம் போடவும்.வெங்காயம் குழம்பிற்கும் கொஞ்சம் வெங்காயம் பூண்டு அரைத்துக் கொள்ளவும் உரித்து தனித்தனியாக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு டேபிள்ஸ்பூன் கசகசா தேங்காய் துருவல் உரித்த சின்ன வெங்காயம் பூண்டு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் மிளகு இவை அனைத்தையும் எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.இதில் வர மிளகாய் தூள் மஞ்சள் தூள் கொத்தமல்லித் தூள் சேர்த்து கடைசியாக வாசம் வர வறுத்துக்கொள்ளவும்.

  3. 3

    வருத்த இவற்றை நன்கு ஆற வைத்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு வாணலியில் அல்லது குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயத் தூள் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பிறகு இதில் தட்டிய சுண்டைக்காய் மற்றும் பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். தேவையான அளவு அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்

  5. 5

    வேகவைத்த சுண்டைக்காய் மற்றும் பாகற்காயுடன சேர்த்து வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொள்ளவும். உப்பு பற்றவில்லை என்றால் தேவையான அளவு மீண்டும் சேர்த்துக் கொள்ளவும். இது ஒரு கொதி வந்த பிறகு கரைத்த புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும்.

  6. 6

    சுவையான ஆரோக்கியமான பாகற்காய் கொண்டைக்கடலை மற்றும் பச்சை சுண்டைக்காய் சேர்த்து புளிக் குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes