ராகி தக்காளி சேமியா(ragi tomato semiya recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5-10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1பாக்கெட் -ராகி சேமியா (180gms)
  2. 1- வெங்காயம்
  3. 2-3 தக்காளி
  4. 2-4 பச்சை மிளகாய்
  5. ஒரு துண்டு இஞ்சி
  6. தலா 1ஸ்பூன் -கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்
  7. தேவைக்குஉப்பு, எண்ணெய் + நெய், கறிவேப்பிலை, மல்லி

சமையல் குறிப்புகள்

5-10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ராகி சேமியாவில் 8 கப் தண்ணி ஊற்றி நன்றாக கலந்து 3 நிமிடம் ஊறவைத்து, எடுத்து தண்ணி வடித்து இட்லி தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து ஆற விட்டு எடுத்து வைத்துக்கவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளி, இஞ்சி,பச்சை மிளகாய், வெட்டி வைத்துக்கவும்

  3. 3

    வாணலி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் + நெய் கலந்து ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து வறுத்து அத்துடன் வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    அதில் ஆறவைத்து வைத்திருக்கும் ராகி சேமியாவை சேர்த்து நன்கு கலந்து கருவேப்பிலை, மல்லி பிச்சி போட்டு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கிளறி ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும்.. சுவையான ஆரோக்கியமான எளிதில். செய்ய கூடிய உதிரியான ராகி சேமியா சாப்பிட தயார்.... குறிப்பு - தக்காளிக்கு பதில் எலுமிச்சை சேர்த்தும் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes