ஹைதராபாத் எக் பிரியாணி

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#CF8
ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் பிடித்தது. இந்த எக் பிரியாணியை நாமும் செய்து அசத்துவோம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40-50நிமிடங்கள்
5நபர்கள்
  1. 10 முட்டை வேக வைத்து ஓடு எடுத்தது
  2. 600 கிராம் பாசுமதி அரிசி
  3. 100கிராம் வெங்காயம் மெலிதாக சீவியது
  4. 100மிலி எண்ணெய்
  5. 1பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  6. 150கிராம் தக்காளி பொடியாக கட் செய்தது
  7. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 4 பச்சை மிளகாய்
  9. 4 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை
  10. 4 டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினா
  11. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 2 டீஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
  14. 1டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த் தூள்
  15. 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  16. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  17. 1 இன்ச் அளவு பட்டை2
  18. 4+4இலவங்கம்
  19. 6 +4ஏலக்காய்
  20. 2பிரிஞ்சி இலை
  21. 1டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
  22. 1/4 கப் வெது வெதுப்பானபாலில் 8குங்குமப்பூ ஊற வைத்தது
  23. தேவையானஅளவு உப்பு
  24. 2 எலுமிச்சை சாறு
  25. 1/4 கப் தயிர்

சமையல் குறிப்புகள்

40-50நிமிடங்கள்
  1. 1

    அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.3 லிட்டர் தண்ணீர் கொதிக்கவிடவும். இதில் 4 ஏலக்காய், 1 இன்ச் பட்டை, 1 பிரிஞ்சி இலை, 4இலவங்கம் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசியைப் போட்டு பாதியளவு வெந்ததும் வடித்து மூடி வைக்கவும். வடித்த சுடு நீரை எடுத்து வைக்கவும்

  2. 2

    பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி இதில் பிரியாணி மசாலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    இதே நேரத்தில் மற்றொரு அடுப்பில் ஒருவாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீவி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் வேகவைத்து லேசாக கீறி வைத்த முட்டைகளைப்போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.

  5. 5

    தக்காளி நன்கு மசிந்ததும் தயிர் சேர்த்து நன்கு கலந்து இதில் முட்டைகளை சேர்த்து வதக்கவும். இதில் 250மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதற்கு
    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  6. 6

    இதில் வேக வைத்த அரிசியை கொட்டி சமமாக பரப்பி விட்டு,அதன் மேல், குங்குமப்பூ சேர்த்த பால், நெய், ரோஸ் வீட்டார், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா வறுத்து வைத்துள்ள வெங்காயம் இவையனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மூடி சுடு நீரை மேலே வைத்து தம் வைக்கவும்.தீயை 2 நிமிடம் ஹையில் வைத்து, பின்னர் 15 - 20 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து லேசாகக் கலந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும். சுவையான ஹைதராபாத் எக் பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes