கத்தரிக்காய் தொக்கு(brinjal thokku recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

கத்தரிக்காய் தாங்க சைவக்காரங்களுக்கு கறி.... எளிமையான, இந்த கத்தரிக்காய் தொக்கு, எலுமிச்சை சாதம் மாதிரி கலவை சாதத்துக்கு அட்டகாசமான வெஞ்சனம்... 😋😋😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. இடித்து விழுது தயாரிக்க
  2. 1இன்ச் இஞ்சி
  3. 8 பல் பூண்டு
  4. 1/2 தேக்கரண்டி சோம்பு
  5. மற்றவை
  6. தாளிக்க எண்ணெய்
  7. ஒரு கொத்து கருவேப்பிலை
  8. 2 பெரிய வெங்காயம்
  9. 1 பெரிய தக்காளி
  10. 2 தேக்கரண்டி குழம்பு பொடி
  11. 1/2 தேக்கரண்டி மிளகாய் பொடி
  12. தேவைக்கேற்ப தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாய் வைத்து எண்ணெய் பொறிந்ததும் இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து தட்டிய விழுது, கருவேப்பிலை போட்டு தாளிக்கனும்.. பிறகு வெங்காயம் போட்டு வதக்கனும்.. வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி போட்டு மசிய வதங்க விடனும்.

  2. 2

    கத்தரிக்காயும், குழம்புப் பொடி, மிளகாய்பொடி, உப்பும் போட்டு கிளறி,தண்ணீர் ஊத்தி மூடி வைக்கனும்..

  3. 3

    வெத்ததும், தொக்கு பக்குவத்துக்கு இறக்கினா, கத்தரிக்காய் தொக்கு தயார்.. எலுமிச்சை சாதம் மாதிரி கலவை சாதத்துக்கு அட்டகாசமான வெஞ்சனம்...

    ஆனந்தமா சாப்பிடுங்க...
    ஆரோக்கியமா இருங்க...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai
அன்று
நான் நான்சி மெர்வின்., புனை பெயர் தமிழ்மொழியாள்.. நான் ஒரு பதினைஞ்சு வருசம் hostel ல இருந்தேங்க... அதோட தாக்கம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஒரு சிறந்த சமையல் கலைஞியா மாத்திடுச்சு😜😜😜... hostel வாழ்க்கையில எனக்கு கிடைக்காத அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் தேடி தேடி தேடி சமைச்சு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோம்...என் கணவருக்கும் என் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும்... அவங்களுக்காக தான் fried rice ல இருந்து bread வரை எந்த chemical ம் chemical preservative ம் சேர்க்காம வீட்லயே செஞ்சு பழகிட்டு செஞ்சு கொடுத்து ஆனந்தமா சாப்பிடுறோம்.. ஆரோக்கியமாக இருக்கோம்...
மேலும் படிக்க

Similar Recipes