எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 மணி நேரம்
15 கிலோ
  1. 5படி இட்லி அரிசி
  2. 1-1/2 கிலோ பொட்டுக்கடலை
  3. 100 கிராம் சீரகம்
  4. 25 வரமிளகாய்
  5. 2 கைப் பிடி அளவு கறிவேப்பிலை
  6. 50 கிராம் ஓமம்
  7. 100 கிராம் கருப்பு எள்ளு
  8. 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 3 லிட்டர் எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

4 மணி நேரம்
  1. 1

    இட்லி அரிசியை மூன்று முறை கழுவி தண்ணீரை ஊற்றி நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி அதனுடன் வரமிளகாய் கறிவேப்பிலை சீரகம் சேர்த்து நைஸாக அரைக்கவும் பின் அதனுடன் உப்பு பெருங்காயத்தூள் எள்ளு மற்றும் ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் பொட்டுக்கடலையை பொடி செய்து ஜலித்து கொள்ளவும் பின் அதை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பின் சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும் பின் முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை நிரப்பவும்

  3. 3

    பின் சின்ன சின்ன தட்டுகளின் பின்புறம் எண்ணெய் தடவி முறுக்கை பிழியவும் பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான பொட்டுக்கடலை முறுக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes