சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#wt2
இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 20 குட்டி தட்டு வடை
  2. 10 வரமிளகாய்
  3. 4பல் பூண்டு
  4. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1கைப்பிடியளவு கொத்தமல்லித்தழை
  7. சிறிதளவுபுதினா
  8. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  9. 1சிறு துண்டு இஞ்சி
  10. 1/2 கப் கேரட் துருவல்
  11. 1/4கப் பீட்ரூட் துருவல்
  12. 1பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  13. 2டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தழை பொடியாக கட் செய்தது
  14. 1 பச்சை மிளகாய் பச்சை மிளகாய்,

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சட்னி வகைகளை செய்ய வேண்டும். க்ரீன் சட்னி :மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு அனைத்தும் நைசாக அரைக்கவும்.

  2. 2

    வரமிளகாயை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து, பூண்டு, உப்பு, எண்ணெய் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இது காரசட்னி.

  3. 3

    கேரட் துருவல், பீட்ரூட் துருவல், வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து வைக்கவும்.

  4. 4

    ஒரு தட்டில் குட்டி தட்டு வடைகளை தனித்தனியாக வைக்கவும். அதன் மேல் காரசட்னி தடவி கேரட் கலவையை வைத்து அதன்மேல் மற்றொரு தட்டுவடையில் க்ரீன் சட்னி தடவி கேரட் கலவையில் வைத்து பரிமாறவும். காரசாரமாக சூப்பர் டேஷ்டில் தட்டுவடை செட் தயார். நீங்களும் செய்து ருசித்துப்பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (3)

Swaminathan
Swaminathan @Swami_180828
Yummy. I am also already posted the same recipe. Please see and send your valuable comments 🤗🤗

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes