நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)

இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 2 நூல்கோல் பொடியாக அரிந்தது
  2. 10 சிறிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1கப் பச்சை பட்டாணி
  5. 1கப் துவரம் பருப்பு
  6. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1ஸ்பூன் எண்ணெய்
  8. 3 ஸ்பூன் சாம்பார் தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. பெரு நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து கரைத்தது
  11. தாளிக்க
  12. 1டீ ஸ்பூன்கடுகு
  13. 1/2டீ ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  14. 2 வரமிளகாய்
  15. 1/4 டீஸ்பூன் பெருங்காய தூள்
  16. கறிவேப்பில
  17. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.படத்தில் காட்டியுள்ளபடி. நூல்கோல் காயை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும். பட்டாணியையும் நூல்களையும் பச்சை வாசம் போக சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி பிறகு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    புளி ஊற வைத்துக் கொள்ளவும். காய்கள் மற்றும் வெங்காயம் தக்காளி வதங்கிய பிறகு (நான் வெங்காயம் சேர்க்க வில்லை.) அதில் சாம்பார் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேக விடவும். பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.பருப்புடன் காய் நன்கு சேர்ந்து முழுதாக நன்கு வெந்தவுடன் கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து ஒரு கொதி விடவும்.பிறகு எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் பெருங்காயத் தூள் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை கடைசியாக சேர்த்துக் கொள்ளவும.

  3. 3

    தேவை என்றால் கொஞ்சமாக சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம் சுவை நன்றாக இருக்கும். நாங்கள் இதுபோன்ற குழம்பிற்கு சர்க்கரை கொஞ்சம் சேர்ப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
You have to specify the spoon l harvested 3 turnips from my garden today

Similar Recipes