சோயா வெஜ் பிரியாணி(soya veg biryani recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

சோயா வெஜ் பிரியாணி(soya veg biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4நபர்
  1. 2 கப் அரிசி
  2. 100 gசோயா சங்க்ஸ்
  3. 1 கப் நறுக்கிய காய்கறிகள் (கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு)
  4. 1 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. கையளவு கொத்தமல்லி புதினா இலை பொடியாக நறுக்கியது
  6. 2பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  7. 4பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது
  8. 1பெரிய தக்காளி நீளவாக்கில் நறுக்கியது
  9. 1/4 கப் புளிப்பில்லாத கெட்டி தயிர்
  10. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  11. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  12. 1/4 டீஸ்பூன் சோம்பு
  13. 1/4 டீஸ்பூன் சீரகம்
  14. 4 கிராம்பு
  15. 1 சிறிய துண்டு பட்டை
  16. 2 ஏலக்காய்
  17. 10 முந்திரி பருப்பு
  18. 2பிரியாணி இலை
  19. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  20. 1 டீஸ்பூன் தனியா தூள்
  21. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  22. தேவையானஅளவு தண்ணீர்
  23. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அரிசியை கழுவி ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    சோயா சங்கம் சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் பிழிந்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் சோயா சங்க்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்க்கவும். இதனுடன் தயிர் 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  4. 4

    அடுப்பை பற்றி வைத்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். காய்ந்ததும் சீரகம் சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பி ன் பு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சிறிதளவு கொத்தமல்லி புதினா இலை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    நன்கு வதங்கியதும் ஊற வைத்த சோயா மற்றும் காய்கறிகள் கலவையை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்ததும் அரிசி சேர்த்து கிளறி விடவும். உப்பு சரிபார்த்து சேர்த்து கொள்ளவும்.

  7. 7

    தண்ணீர் வற்றி வரும் போது நெய் மற்றும் கொத்தமல்லி புதினா இலைகளை தூவி 10- 15 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

  8. 8

    15 நிமிடங்கள் கழித்து திறந்து பிரியாணியை நன்கு கிளறி விடவும். இப்போது சுவையான சோயா வெஜ் பிரியாணி தயார். தயிர் வெங்காயம் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes