ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
2பேர்
  1. 2குடை மிளகாய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1டேபிள் ஸ்பூன் கடலைமாவு
  6. 3டேபிள் ஸ்பூன் தயிர்
  7. 3/4-1ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/2டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  9. 1/2ஸ்பூன் கரம் மசாலா
  10. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1ஸ்பூன் கஸ்தூரி மெத்தி அல்லது நறுக்கிய மல்லித்தழை
  12. 1ஸ்பூன் சீரகம்
  13. 4ஸ்பூன் எண்ணெய்
  14. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ரொம்ப புளித்த தயிர் வேண்டாம்.

    வெங்காயம் 1/4பகுதி பெரியதாகவும்,3/4பகுதி சிறியதாகவும் வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    முதலில்,வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு அதிக தீயில் வைத்து,பெரியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2-3நிமிடங்கள் சுருங்க வதக்கவும்.

  3. 3

    அதே வாணலியில் மேலும் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம்,தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக கிளறி, கடலைமாவு சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். மசிய வதங்கியதும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கிளறி,பின் தயிர் சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    பின்,250ml தண்ணீர் சேர்த்து அதனுடன்,வதக்கிய குடை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து கலந்து 15 நிமிடங்களுக்கு மசாலா பச்சை வாசம் போக கொதிக்க விடவும்.உப்பு சேர்க்கவும்.

  6. 6

    தேவையான கிரேவி பதம் வந்ததும்,கடைசியாக கஸ்தூரி மெத்தி அல்லது மல்லி இலை தூவி இறக்கவும்.

  7. 7

    அவ்வளவுதான். சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி ரெடி.

    இது சப்பாத்தி மற்றும் புலாவ் வகைகளுக்கு நன்றாகப் பொருந்ததும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes