மிளகு தக்காளி ரசம்(tomato pepper rasam recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu

மிளகு தக்காளி ரசம்(tomato pepper rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 4 தக்காளி
  2. 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  3. 3 காய்ந்த மிளகாய்
  4. 4 பல் பூண்டு
  5. 1 தேக்கரண்டி மிளகு
  6. 1 தேக்கரண்டி சீரகம்
  7. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  8. கொஞ்சம்மல்லி இலை
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1/4 தேக்கரண்டி கடுகு
  11. 1 கொத்து கறிவேப்பிலை
  12. 3/4 லிட்டர் தண்ணீர்
  13. 1/2 எலுமிச்சை அளவு புளி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் தோலுடன் பூண்டு பற்கள் மிளகு சீரகம் 4 மல்லி இலையை வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பிறகு தக்காளியை நறுக்கி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதில் மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து 30 வினாடிகள் வதக்கி விடவும்.

  3. 3

    இதில் புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறுதீயில் ஓரங்கள் நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும். இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    சுவையும் மணமும் நிறைந்த மிளகு தக்காளி ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ayisha
Ayisha @Ayshu
அன்று

Similar Recipes