மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#made4
அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 2 கப்அரிசி -
  2. 2மாங்காய்-(மீடியம்சைஸ்)
  3. 2ஸ்பூன்கடலை பருப்பு -
  4. 2ஸ்பூன்நிலக்கடலைவறுத்தது-
  5. 4முந்திரிபருப்பு-
  6. 2வரமிளகாய்-
  7. 2பச்சை மிளகாய்-
  8. 1சிறிய துண்டுஇஞ்சி -
  9. 4பூண்டு பல்- (விருப்பப்பட்டால்)
  10. தாளிக்க
  11. கால்ஸ்பூன்கடுகு-
  12. கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு-
  13. கொத்துகருவேப்பிலை-
  14. கால்ஸ்பூன்பெருங்காயம்-
  15. தேவைக்குஉப்பு-
  16. தேவைக்குநல்லெண்ணெய்-
  17. கால்ஸ்பூன்மஞ்சள்பொடி-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானப் பொருட்களைஎடுத்துவைத்துக்கொள்ளவும்.மாங்காயை கழுவிவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    சாதம் உப்பு போட்டு ரெடிப்பண்ணிக்கொள்ளவும்.மாங்காயை தோல்எடுத்து துருவிவைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின் வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.

  4. 4

    பின்வரமிளகாய், பச்சைமிளகாய்நறுக்கியபூண்டு பல்சேர்க்கவும்.கடலைபருப்பு,வேர்கடலை,முந்திரிபருப்புசேர்க்கவும்.நறுக்கியஇஞ்சிசேர்க்கவும்.

  5. 5

    கருவேப்பிலைசேர்க்கவும்.நன்குகடலைபருப்புபொன்கலராகும்வரை வதக்கிவிடவும்.

  6. 6

    பின் தேவையானஉப்பு சேர்க்கவும்.பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  7. 7

    பின் துருவிய மாங்காயைச்சேர்த்து நன்கு வதக்கிவிடவும்.மஞ்சள்பொடி சேர்க்கவும்.

  8. 8

    மாங்காய் நன்கு வெந்து சுருண்டுவரும்.அப்போது இறக்கிவிடுங்கள். நன்கு எண்ணெய்பிரிந்து இருக்கும்.இந்த மாங்காய் கிரேவியில் சாதத்தைப்போட்டு நன்கு பிரட்டி விடுங்கள்.சுவையான மாங்காய் சாதம் ரெடி.

  9. 9

    மாங்காய் சாதத்துக்கு மாங்காய் துவையல்,மாங்காய் பச்சடி நன்றாக இருக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes