அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#queen1
அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்.

அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)

#queen1
அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. மாவு அரைக்க
  2. 1 கப் - இட்லி அரிசி
  3. 1/2 கப் - துவரம் பருப்பு
  4. 1/2 கப்- கடலைப்பருப்பு
  5. 1/4 கப் -பாசிப்பருப்பு
  6. 1/4 கப் -உளுந்து
  7. 1/2 தே.க - வெந்தயம்
  8. 5 - காய்ந்த மிளகாய்
  9. 6 பல் - பூண்டு
  10. மாவில் சேர்ப்பதற்கு தேவையான பொருட்கள்
  11. 1- வெங்காயம்
  12. சிறிதளவுகறிவேப்பிலை
  13. 1/2 தே.க -சீரகம்
  14. 1/4 தே.க - பெருங்காயத் தூள்
  15. தேவையான அளவுஉப்பு
  16. 1/4 தே.க - மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் இட்லி அரிசி சேர்த்து நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு மற்றொரு பாத்திரத்தில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். (அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக ஊறவைத்து அரைத்தால் மாவு கொழகொழவென்று இருக்கும்.)

  3. 3
  4. 4

    பிறகு அதில் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

  5. 5
  6. 6

    அரிசி நன்றாக ஊறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பருப்புகளை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  7. 7

    மாவை குறைந்தது நான்கு மணி நேரம் புளிக்க வைத்து செய்தால் அடை தோசை நன்றாக இருக்கும்.

  8. 8

    மாவு நன்றாக புளித்ததும் அதில் மஞ்சள் தூள்,பெருங்காயத் தூள்,(கண்டிப்பாக பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவேண்டும் பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதினால் செரிமானத்திற்கு மிகவும் உதவும்) தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  9. 9

    பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  10. 10

    தோசைக் கல் சூடானதும் சிறிதளவு மாவை கரண்டியில் எடுத்து மெல்லியதாக ஊற்றி மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். (அதிக பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதினால் நன்றாக வேக வைத்து எடுக்கவும்) நெய் சேர்த்துக் கொண்டால் கமகம வாசனையுடன் அடை தோசை கூடுதல் சுவையாக இருக்கும்.

  11. 11
  12. 12

    அடை தோசை சுவைக்க தயார் 🌮🌮🌮😋😋😋. தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சுவைக்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

  13. 13

    அதிகம் சத்துக்கள் நிறைந்த தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்.

  14. 14
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes