இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣

#1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பேர்
  1. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  2. தேவையானஅளவுகல் உப்பு
  3. 1 கப் துவரம்பருப்பு
  4. சிறிதளவுகறிவேப்பிலை
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 3 டேபிள் ஸ்பூன் தனியா
  7. 8 காய்ந்த மிளகாய்
  8. 1/4 ஸ்பூன் மிளகு
  9. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  10. 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  11. சிறிதளவுபுளி
  12. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. 4 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  14. 2 வெங்காயம்
  15. 1 ஸ்பூன் பூண்டு பொடி
  16. 2 தக்காளி
  17. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  18. 2 பல் பூண்டு
  19. கடுகு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை போட்டு சிறுதீயில் வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு கடாயில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை ஆகிய எல்லாவற்றையும் நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். பிறகு கடாயில் கால் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், புளியை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    ஆறியவுடன் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்,பூண்டு பொடி, பொட்டுக்கடலை பொடி எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இன்ஸ்டன்ட் சாம்பார் மிக்ஸ் தயார்

  5. 5

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு நசுக்கிய பூண்டு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்

  6. 6

    இன்ஸ்டன்ட் சாம்பார் பொடி மூன்று ஸ்பூன் எடுத்து தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து அதை தாளிப்பில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும் அடிப்பிடிக்காமல் 3 நிமிடம் கிளறினால் நமது இன்ஸ்டன்ஸ் சாம்பார் தயார். சிறிதளவு தேங்காய்த்துருவல், மல்லி இலை தூவி பரிமாறலாம்.🤤🤤😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes