*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இது எனது 250 வது ரெசிபி.பழங்கள் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை.இதில் உள்ள பழங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயன் தரக் கூடியது.

*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)

இது எனது 250 வது ரெசிபி.பழங்கள் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை.இதில் உள்ள பழங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயன் தரக் கூடியது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 1/2 லிக்ரீமி பால்
  2. 1பழுத்த மாம்பழம்
  3. 2ஆப்பிள்
  4. 2கொய்யா
  5. 2வாழைப்பழம்
  6. 1 டீ ஸ்பூன்வெண்ணிலா எஸன்ஸ்
  7. 2 டேபிள் ஸ்பூன்சீவின பாதாம்
  8. 1 டேபிள் ஸ்பூன்சோளமாவு
  9. 1 சிட்டிகைஎல்லோ கலர்
  10. 1 டம்ளர்சர்க்கரை
  11. 2 டேபிள் ஸ்பூன்அலங்கரிக்க:-சீவின பாதாம்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    பழங்களை சுத்தம் செய்து, தோலை சீவி சற்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    பாதாமை சீவிக் கொள்ளவும்.சோளமாவை, பாலில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் பாலை ஊற்றி, அடுப்பை மீடியத்தில் வைத்துக் காய்ச்சவும்.

  4. 4

    பெரிய மிக்ஸி ஜாரில் ஆப்பிள், கொய்யா, மாம்பழத்தை போட்டு மைய அரைக்கவும்.

  5. 5

    அரைத்ததும், சர்க்கரையை சேர்த்து, மைய அரைக்கவும்.

  6. 6

    பால் காய்ந்து சற்று குறுகியதும்,கரைத்த சோள மாவை அடுப்பை சிம்மில் வைத்து ஊற்றவும்.

  7. 7

    எல்லோ கலர் பவுடரை பாலில் கரைத்து விடவும்.

  8. 8

    பின் நன்கு கலந்து கொதித்ததும், அரைத்த விழுதை போட்டு,கெட்டியாகி, கிளறினதும்,அடுப்பை நிறுத்தி விட்டு, வெண்ணிலா எஸன்ஸை விடவும்.

  9. 9

    பிறகு, பௌலுக்கு மாற்றி, நறுக்கின ஆப்பிளை போடவும்.

  10. 10

    அடுத்து கொய்யா பழம்,.வாழைப் பழம் சேர்க்கவும்.

  11. 11

    அடுத்து, சீவின பாதாமை சேர்த்து,1மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து எடுக்கவும்.

  12. 12

    மேலே சீவின பாதாமை போட்டு அலங்கரிக்கவும்.இப்போது,*யம்மி ஃப்ரூட் புட்டிங்* தயார்.இந்த வெயிலுக்கு செய்து, அனைவருக்கும் கொடுத்து பாராட்டை பெறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes