கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு (village style ladys finger spicy gravy in Tamil)

கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு (village style ladys finger spicy gravy in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காய் நறுக்கிய பெரிய வெங்காயம் வெந்தயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்... வெண்டைக்காயுடன் வெங்காயமும் வெந்தயமும் சேரும்போது வதக்கும் போதே மணம் அருமையாக இருக்கும்
- 2
புளியை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கரைத்துக்கொள்ளவும் அத்துடன் மிளகாய் தூள் இரண்டையும் சேர்த்து மஞ்சள் தூளையும் சேர்த்து கொதிக்கவிடவும்... காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. காரம் அதிகமாக தேவை என்றால் இன்னும் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்...
- 3
குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போது அத்துடன் தக்காளியும் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
மிக்ஸி ஜாரில் தேங்காய் வெங்காயம் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அத்துடன் தேவையான உப்பையும் சேர்க்கவும்
- 5
வெண்டைக்காய் குழம்பு கொதித்த பிறகு தான் சேர்க்க வேண்டும் முதலிலேயே சேர்த்து விட்டால் குழம்பு கொழகொழவென்று ஆகிவிடும்... குழம்பின் பச்சை வாசனை போன பிறகு அதில் வெண்டைக்காய் சேர்த்து வேகவிடவும்.. வெண்டைக்காய் ஏற்கனவே வதக்கி இருப்பதால் அது பாதி வெந்திருக்கும் அதனால் சிறிது நேரம் வேக விட்டால் போதுமானது..
- 6
குழம்பு கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்... ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்..
- 7
இப்போது சூடான சுவையான காரசாரமான கிராமத்து வெண்டைக்காய் கார குழம்பு தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N -
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
வெண்டைக்காய் மண்டி (Ladies finger gravy curry Recipe in tamil)
வெண்டைக்காய் மண்டி செட்டி நாட்டு பாரம்பரிய குழம்பு. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
கிராமத்து அகத்திப்பூ பொரியல் (village style akaththi flower fry recipe in tamil)
அகத்திப்பூ வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளையாக உள்ள பூவை விட சிகப்பு பூ அதிக சுவை மிகுந்தது.கிராமங்களில் பண்டை காலம் முதல் அதிகமாக உபயோகிக்கும் ஒன்று இந்த சிகப்பு அகத்திப்பூ.#vk Renukabala -
வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்.... Nalini Shankar -
-
-
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்