* கோதுமை மாவு பிஸ்கெட்*(wheat biscuit recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கோதுமை, இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கிறது.கோதுமையில் புற்றுநோயை தடுக்கும், வைட்டமின் ஈ, செலினியம், மற்றும் நார்ச்சத்து இருக்கின்றது.மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
நிறைய
  1. 1 3/4 கப்கோதுமை மாவு
  2. 1/4 கப்கடலை மாவு
  3. 1 டம்ளர்உருக்கிய பசு நெய்
  4. 1 டம்ளர்சர்க்கரை
  5. 12முந்திரி,
  6. 12பாதாம்
  7. 1 சிட்டிகைஉப்பு (ருசிக்கு)
  8. தேவைக்குகல் உப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    சிறிய மிக்ஸி ஜாரில் பாதாம், முந்திரியை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.

  3. 3

    பொடித்ததை தட்டில் எடுக்கவும்.

  4. 4

    சர்க்கரையை நன்கு அரைக்கவும்.

  5. 5

    பெரிய பௌலில், நெய் சேர்க்கவும்.

  6. 6

    அடுத்து பொடித்த சர்க்கரையை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்துக் கொள்ளவும்.

  7. 7

    முதலில் கோதுமை மாவை சலித்து சேர்க்கவும்.அடுத்து கடலை மாவை சலிக்கவும்.

  8. 8

    மாவில், உப்பு 1 சிட்டிகை சேர்த்துக் கொள்ளவும்.

  9. 9

    அனைத்தையும் ஒன்று சேர நன்கு கலந்து,மாவை சிறிது லூஸாக பிசைந்துக் கொள்ளவும்.

  10. 10

    கையில் மாவை உருட்டி, சதுர வடிவத்தில், ஸ்பூனால் கோடு போடவும்.

  11. 11

    சிறிது மாவை வட்ட வடிவில் தட்டி, பொடித்த பாதாம், முந்திரியை, சிறிது குழி செய்து நடுவில் வைத்து தட்டில் அடுக்கவும்.

  12. 12

    குக்கரின் அடியில் கல் உப்பை போட்டு அடுப்பை சிறு தீயில், 10 நிமிடம் சூடு படுத்தவும்.

  13. 13

    இட்லி தட்டில் நெய் தடவவும்.தட்டினதை தட்டில் வைக்கவும்.

  14. 14

    அடுத்த தட்டிலும் நெய் தடவி வைக்கவும்.

  15. 15

    முதல் தட்டை விட்டு விட்டு அடுத்த தட்டில் வைக்கவும்.

  16. 16

    இதே போல் எல்லா தட்டுகளிலும் வைத்து, குக்கரை மூடி, கேஸ் கட், வெயிட் போடாமல் 20 நிமிடம் வேக விட்டு, தட்டில் எடுக்கவும்.

  17. 17

    இப்போது, சுவையான, சுலபமான,* கோதுமை மாவு பிஸ்கெட்*

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes