*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#VK
கல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும்.

*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)

#VK
கல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 3/4 கப்பயத்தம் பருப்பு
  2. 15வெண்டைக்காய்
  3. 1வெள்ளரிக்காய்
  4. 2தக்காளி
  5. 1குடமிளகாய்
  6. 2புடலங்காய் (சிறியது)
  7. 1சௌசௌ(சிறியது)
  8. வறுத்து அரைக்க :-
  9. 2 ஸ்பூன்தனியா
  10. 1 ஸ்பூன்க.பருப்பு
  11. 1 ஸ்பூன்உ.பருப்பு
  12. 12சி.மிளகாய்
  13. 2 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  14. ருசிக்குகல் உப்பு
  15. 1 ஸ்பூன்ம.தூள்
  16. 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  17. 1 ஸ்பூன்வறுத்து அரைத்த பொடி
  18. 2ப.மிளகாய்
  19. தாளிக்க:-
  20. 1 டீ ஸ்பூன்கடுகு
  21. 2 டீ ஸ்பூன்வெந்தயம்
  22. 2சி.மிளகாய்
  23. 1 ஆர்க்குகருவேப்பிலை
  24. 2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  25. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.காய்கறிகளை சுத்தம் செய்து, சற்று பெரியதாக நறுக்கவும்.ப.மிளகாயை இரண்டாக, கீறிக் கொள்ளவும்.

  2. 2

    ப.பருப்பை நன்கு சுத்தம் செய்து, ம.தூள், உப்பு போடவும்.

  3. 3

    அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில் பருப்பை போட்டு தேவையான தண்ணீர் விட்டு, 3/4 பங்கு வேக விடவும்.

  4. 4

    அடுப்பை நிறுத்தி விட்டு,முதலில், தக்காளி, ப.மிளகாயை போடவும்.

  5. 5

    அடுத்து புடலங்காயை போடவும்.

  6. 6

    பிறகு, சௌசௌ, வெள்ளரிக்காயை போடவும்.

  7. 7

    கடைசியாக, குடமிளகாயை போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

  8. 8

    வெறும் கடாயில், தனியா, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாயை கருகாமல் வறுத்து கொர கொரப்பாக அரைக்கவும்.

  9. 9

    காய்கறிகள் வெந்ததும், சாம்பார் பொடி, வறுத்து அரைத்த பொடியை போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, ஒன்று சேர வேக விடவும்.

  10. 10

    அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும்.கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடவும்.

  11. 11

    கடுகு பொரிந்ததும், வெந்தயம், மிளகாய் தாளித்ததும், வெண்டைக்காய், உப்பு, ம.தூள் போடவும்.

  12. 12

    ஒட்டாமல் வரும் வரை வெண்டைக்காயை வதக்கினதும், வெந்த பருப்பு, காய்கறிகளை சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து, ஒன்று சேர 5 நிமிடம் வேக விடவும்.

  13. 13

    வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு பௌலுக்கு மாற்றி, பெருங்காயத் தூள் போட்டு நன்கு கலக்கவும்.

  14. 14

    இப்போது மிகவும் சுவையான,*கல்யாண மசியல்* தயார்.இது, சுடு சாதத்தில்,நெய் விட்டு சாப்பிடலாம்.உடைத்த அரிசி உப்புமா, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.

  15. 15

    இதில் போட்ட, வறுத்த பொடி தான் ஹைலைட்.செய்து பார்த்து, அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes