ரவா ஆனியன் தோசை (Rava onion dosa recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#ds

ரவா ஆனியன் தோசை (Rava onion dosa recipe in tamil)

#ds

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
  1. 3/4 கப் வெள்ளை ரவை
  2. 1/2 கப் மைதா மாவு
  3. 1/2 கப் அரிசி மாவு
  4. 1 டீஸ்பூன் சர்க்கரை
  5. 1 டீஸ்பூன் சீரகம்
  6. 1/2 டீஸ்பூன் மிளகு
  7. 1/4டீஸ்பூன் மிளகு தூள்
  8. 1 பச்சை மிளகாய்
  9. 1டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு
  10. கொத்தமல்லி இலை
  11. கறிவேப்பிலை
  12. 1 டேபிள்ஸ்பூன் நெய்
  13. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் வெள்ளை ரவை, அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து கலந்து விடவும்.

  2. 2

    பின்னர் அத்துடன் சீரகம், மிளகு தூள்,மிளகு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை,மல்லி இலை,முந்திரி,உப்பு,சர்க்கரை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    அத்துடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    பின்னர் ஒரு கப் தண்ணீர்,கொஞ்சம் ரவை சேர்த்து கலந்து விட்டால் ரவா தோசை மாவு தயார்.

  5. 5

    பின்னர் தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி ரவா தோசை மாவு தெளித்து விடவும்.

  6. 6

    அதன் மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,மல்லி இலை தூவி நன்கு கரண்டி வைத்து அழுத்தி விடவும்.

  7. 7

    மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.

  8. 8

    திருப்பி போட்டு இரண்டு நிமிடங்கள் வெந்ததும் எடுக்கவும்.

  9. 9

    இந்த ரவா ஆனியன் தோசைக்கு உடன் சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes