இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் கடலைப்பருப்பு
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 5 பல் பூண்டு
  4. 4 காய்ந்த மிளகாய்
  5. 1 தேக்கரண்டி சீரகம்
  6. 1 தேக்கரண்டி சோம்பு
  7. 2 தக்காளி
  8. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. தேவையானஅளவு தண்ணீர்
  10. 5 கறிவேப்பிலை
  11. கொத்தமல்லி
  12. 1 சிறிய கேரட்
  13. 1 சிறிய உருளைக்கிழங்கு
  14. 2 கத்தரிக்காய்
  15. தாளிப்பதற்கு
  16. 1 தேக்கரண்டி கடுகு
  17. கறிவேப்பிலை
  18. 2 காய்ந்த மிளகாய்
  19. 2 சின்ன வெங்காயம்
  20. 1/4 தேக்கரண்டி சீரகம்
  21. 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  22. 3மேசைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் கடலைப் பருப்பு வெங்காயம் பூண்டு இவற்றை கழுவி சேர்க்கவும். இதில் வர மிளகாய் சீரகம் சோம்பு கறிவேப்பிலை மஞ்சள்தூள் நறுக்கிய தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சமாக விளக்கெண்ணை ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வேகவிடவும்.

  2. 2

    வெந்தபின் பருப்பு மற்றும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பருப்பை ஆறவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பருப்பு தண்ணீரை மீண்டும் குக்கரில் சேர்த்து பொடியாக நறுக்கிய கேரட் உருளைக் கிழங்கு கத்தரிக்காய் இவற்றை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வேகவிடவும்.

  3. 3

    ஒரு தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை சீரகம் பெருங்காயத்தூள் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும் இதில் மிக்ஸியில் அரைத்த பருப்பு மற்றும் காய்கறி கலவை இவற்றை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  4. 4

    இதனை நன்றாக கொதிக்க வைக்கவும். நுரைக்க கொதித்த பின் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகள் சேர்த்து இட்லியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes