ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.

ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)

#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
1நபர்
  1. 1கப் ராகி மாவு
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  4. 1கையளவு முருங்கைக்கீரை
  5. 1மிளகாய்
  6. 1ஸ்பூன் கறிவேப்பிலை
  7. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    நறுக்கிய வெங்காயத்தை, தோசைக்கல்லில் 1ஸ்பூன் எண்ணெயில் வதக்கி மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.அல்லது நேரடியாக,நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்க்கலாம்.

  3. 3

    மாவுடன்,எடுத்துள்ள பொருட்கள் எல்லாம் சேர்த்து கலந்து,வதக்கிய வெங்காயம் சேர்த்து பின் தேவையான அளவு சுடுநீர் சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவுக்கு பிசைந்து கொள்ளவும்.

    ராகி அடை, சாஃப்ட் டாக வர சுடுநீரில் பிசைந்தால் நன்று.

  4. 4

    பின் சிறிதளவு எடுத்து வாழை இலை அல்லது அலுமினியம் ஃபாயில் பேப்பரில் எண்ணெய் தடவி சிறிதளவு மாவு வைத்து,குளிர் நீரை கைகளால் தொட்டு மாவை வட்டமாக விரித்து விடவும்.

  5. 5

    பின் தோசைக் கல்லில்,அப்படியே தலை கீழாக திருப்பி கவிழ்த்த வேண்டும்.தேவையான அளவு எண்ணெய் சுற்றிலும் ஊற்றவும்.

  6. 6

    இனி மூடி போட்டு 3நிமிடங்கள் வேக விடவும்.மூடி போட்டு மூடும் போது மேல்புறம் வர வர வென்று ஆகாது.திருப்பி போட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

  7. 7

    அவ்வளவுதான். சுவையான,குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய ராகி அடை ரெடி.

    இதற்கு சைடிஷ் தேவைப்படாது.மேலும், எல்லா குழம்பு மற்றும் சட்னி வகைகளும் பொருத்தமாகவே இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes