வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil)

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir

வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 நபர்கள்
  1. 10வெண்டைக்காய்
  2. 100 கிராம்வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. தேவைக்கு குழம்பு மிளகாய்த்தூள்
  5. சிறிதுகறிவேப்பிலை
  6. சிறிதுதேங்காய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் வெண்டைக்காயை சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு 100 கிராம் சின்ன வெங்காயம் மற்றும் 2 தக்காளிகளை முழுதாகப் போட்டு தனித்தனியே வதக்கிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூடான கடாயில் ஒரு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் வீட்டில் அரைத்த குழம்பு மிளகாய் தூள் தேவைக்கேற்ப சேர்த்து வதக்க வேண்டும்.

  3. 3

    சிறிய தேங்காய் அரை மூடி தேங்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நாம் வதக்கி வைத்த வெங்காயம், தக்காளி, குழம்பு மிளகாய்த்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் அந்த தேங்காயுடன் சேர்த்து அரைக்க வேண்டும். தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக்கொள்ளலாம்

  4. 4

    அரைத்த விழுதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இறக்கி வைக்கவேண்டும் சுலபமான அரைத்த வெண்டைக்காய் குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir
அன்று

Similar Recipes