ரெட் வெல்வெட் கேக்(red velvet cake recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்
  1. 1/2 கப் பால்
  2. 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  3. 1 கப் மைதா
  4. 3/4 கப் அரைத்த சர்க்கரை
  5. 1.5 டீஸ்பூன் கோகோ பவுடர்
  6. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  9. 1/2 கப் எண்ணெய்
  10. தேவையானஅளவு ரெட் ஃபுட் கலர்
  11. க்ரீம் செய்வதற்கு
  12. 50கி விப்புடு க்ரீம்
  13. 100 மில்லி குளிர்ந்த பால

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து தனியே வைத்து கொள்ளவும். இதுவே கேக் செய்வதற்கான உடனடி பட்டர் மில்க்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, பவுடர் சுகர், எண்ணெய்,வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தனியே வைத்திருக்கும் பட்டர் மில்க் சேர்த்து கலந்து கொள்ளவும்.தேவையான அளவு ரெட ஃபுட் கலர் சேர்த்து கொள்ளவும். நான் டொமேட்டோ ரெட் கலர் சேர்த்தேன் எதிர்பார்த்த ரெட் வர வில்லை.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பாத்திரத்தை வைத்து 15 நிமிடத்திற்கு ப்ரீ ஹீட் செய்யவும். பிறகு ஒரு வட்ட வடிவ பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை ஊற்றி பாத்திரத்தில் வைக்கவும்.

  4. 4

    30-40 நிமிடங்கள் கழித்து ஒரு டூத் பிக் வைத்து கேக்கின் அடி பாகம் வரை குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வருவதே கேக் தயாரான பதம். அடுப்பை அணைத்து கேக்கை ஆற விடவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் விப்புடு க்ரீம் மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து எலக்ட்ரிக் பிளண்டர் (அ) விஸ்கி(அ) ஸ்பூன் வைத்து நன்கு அடித்து கொள்ளவும். 5-10 நிமிடங்களுக்குள் க்ரீம் கிடைத்து விடும். இதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து விருப்பம் போல் கேக்கை அலங்கரித்து கொள்ளவும். ரெட் வெல்வெட் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes