*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#qk
கத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)

#qk
கத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 1பெரிய கத்தரிக்காய்
  2. 3 கப்வடித்த சாதம்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 1 ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  6. 1டீ ஸ்பூன்ம.தூள்
  7. ருசிக்குஉப்பு
  8. 3கீறின ப.மிளகாய்
  9. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  10. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  11. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  12. 1 டீ ஸ்பூன்கடுகு
  13. 1ஸ்பூன்உ.பருப்பு
  14. 1ஸ்பூன்க.பருப்பு
  15. 1 ஸ்பூன்சீரகம்
  16. 2 ஸ்பூன்நெய்
  17. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போடவும்.வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை, மெல்லியதாக நீள வாக்கில் நறுக்கவும்.

  2. 2

    சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.அடுப்பை சிறிய தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு பொரிந்ததும், சீரகம், க.பருப்பு, உ.பருப்பு, போடவும்.

  3. 3

    அடுத்து, வெங்காயம், பல.மிளகாய், உப்பு, ம.தூள் போடவும்.

  4. 4

    நன்கு வதங்கியதும், தக்காளி, மி.தூள் போட்டு வதக்கவும்.

  5. 5

    அடுத்து கத்தரிக்காயை போட்டு, ஒன்று சேர வதக்கவும்.

  6. 6

    பிறகு வடித்த சாதத்தை போட்டு கிளறி தும், அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு, கொத்தமல்லி தழை, பெருங்காயத் தூள், போடவும்.

  7. 7

    பிறகு நன்கு கிளறி, மேலே சிறிது நெய் விடவும்.

  8. 8

    பின், பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுவையான, சுலபமான,* பிரிஞ்ஜால் ரைஸ்* தயார்.செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes