ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#FC Nalini_cuisine, @*சாதம்,
தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.

ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)

#FC Nalini_cuisine, @*சாதம்,
தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பேர்
  1. 3/4 கிஉருளை கிழங்கு
  2. 1 ஸ்பூன்தனி மி.தூள்
  3. 1 ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  4. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  5. ருசிக்குஉப்பு
  6. வறுத்து பொடிக்க:-
  7. 2 டீ ஸ்பூன்சோம்பு
  8. தாளிக்க:-
  9. 1 டீ ஸ்பூன்கடுகு
  10. 1 ஸ்பூன்உ.பருப்பு
  11. 1 ஸ்பூன்க.பருப்பு
  12. 1 ஆர்க்குகருவேப்பிலை
  13. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  14. 5 பல்பூண்டு
  15. 2 டேபிள் ஸ்பூன்தே.எண்ணெய்
  16. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    உருளை கிழங்கை சுத்தம் செய்து 4 துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும்.

  3. 3

    பிறகு மூடி 1 விசில் விட்டு குழையாமல் வேக விடவும்.

  4. 4

    உரலில் பூண்டை போட்டு நசுக்கி, தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், சோம்பை போட்டு கருகாமல் நன்கு வறுத்து ஆற விடவும்.

  6. 6

    ஆறினதும் மிக்ஸி ஜாரில் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும்.

  7. 7

    உருளை கிழங்கு வெந்ததும் தட்டில் போட்டு ஆற விடவும்.

  8. 8

    பிறகு தோலை உரித்துக் கொள்ளவும்.

  9. 9

    அடுத்து சிறுசிறு துண்டுகளாக கட் செய்து பெரிய பௌலில் போடவும்.

  10. 10

    பிறகு, ம.தூள், மி.தூள், காஷ்மீரி மி.தூள்,சேர்க்கவும்.

  11. 11

    பின் உப்பு சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ளவும்.

  12. 12

    அடுத்து நசுக்கின பூண்டை சேர்த்து குலுக்கிக் கொள்ளவும்.

  13. 13

    அடுப்பை மீடியத்தில் வைத்து கடாயில்,தே.எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு, போடவும்.

  14. 14

    பருப்பு சிவந்ததும், கருவேப்பிலை போடவும்.பிறகு உருளை கிழங்கை போடவும்.

  15. 15

    அனைத்தையும் ஒன்று சேர கிளறவும்.

  16. 16

    கிளறினதும், வறுத்து பொடித்த சோம்பு பொடி, பெருங்காயத் தூள் போட்டு, 5 நிமிடம் ஒன்று சேர உருளை கிழங்கை உடையாமல் கிளறி, அடுப்பை நிறுத்தி விடவும்.

  17. 17

    பிறகு பௌலுக்கு மாற்றவும்.இப்போது,*ஸ்பைஸி உருளை பொரியல்* தயார்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.இந்த பொரியலின் ஹைலைட்டே,இதில் போட்ட சோம்பு பொடி தான்.தே.எண்ணெயில் செய்வதால்,சுவை அதிகம்.இந்த பொரியலை செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes