பாரம்பரிய இனிப்புகள்(traditional sweets recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

பாரம்பரிய இனிப்புகள்(traditional sweets recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 மணி நேரம்
15 பேர்
  1. லட்டு செய்ய:
  2. 1/2 கிலோ கடலைமாவு
  3. 1 கிலோ சர்க்கரை
  4. 25 கிராம் ஏலக்காய்
  5. 50 கிராம் திராட்சை
  6. 50 கிராம் முந்திரி
  7. 200 கிராம் நெய்
  8. எண்ணெய் பொரிப்பதற்கு
  9. ஜாமூன் செய்ய:
  10. 1/4 கிலோ இனிப்பில்லாத கோவா
  11. 5 டேபிள்ஸ்பூன் மைதா
  12. 1/2 ஸ்பூன் சோடா உப்பு
  13. 1 ஸ்பூன் ஏலக்காய் விதை
  14. 1 டேபிள்ஸ்பூன் நெய்
  15. 1/2 கிலோ சர்க்கரை
  16. சிறிதுமஞ்சள் புட் கலர்
  17. பாதாம் கத்லி செய்ய:
  18. 200 கிராம் பாதாம்
  19. 300 கிராம் சர்க்கரை
  20. 100 கிராம் இனிப்பில்லாத கோவா
  21. 1/4 கப் நெய்
  22. சிறிதுநட்ஸ்
  23. சிறிதுஏலத்தூள்
  24. ஜிலேபி செய்ய:
  25. 1 கப் ஜிலேபி உளுந்து
  26. 1/4 கப் பச்சரிசி
  27. 1/2 கப் கார்ன்ப்ளார்
  28. 3 கப் சர்க்கரை
  29. சிறிதுஏலத்தூள்
  30. 1 ஸ்பூன் லெமன் சாறு
  31. சிறிதுஆரஞ்சு புட் கலர்
  32. தேங்காய் பர்பி செய்ய:
  33. 5 பெரிய சைஸ் தேங்காய்
  34. 1 கிலோ சர்க்கரை
  35. 100 கிராம் பொட்டுக்கடலை
  36. சிறிதுஏலத்தூள்

சமையல் குறிப்புகள்

6 மணி நேரம்
  1. 1

    லட்டு செய்ய கடலைமாவை கட்டியில்லாமல் ஜலித்து பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும் தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும் பின் சூடான எண்ணெயில் ஜார்னியில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும் தேய்க்க கூடாது தட்டினால் போதும் பூந்தி முத்து முத்தாக விழ வேண்டும் பின் 60 சதவீதம் வரை வெந்தா போதும் முழுவதும் வேக கூடாது பூந்தி மொறு மொறுனு இருக்க கூடாது மெத்தென்று இருக்க வேண்டும்

  2. 2

    பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் சிறிது நெய் மற்றும் மஞ்சள் புட் கலர் சிறிது பொரித்து வைத்துள்ள பூந்தியை சேர்த்து நன்கு கிளறவும் பூந்தி பாகை இழுத்து ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கவும் மிகவும் கெட்டியாக கிளற கூடாது ஆறிய பின் மிகவும் கடினமான இருக்கும் தளதளன்னு இருக்கும் போது இறக்கினா ஆறிய பின் சரியாக இருக்கும் பின் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து இதனுடன் சேர்க்கவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி ஆறவிடவும்

  3. 3

    பின் இரண்டு மூன்று மணி நேரம் வரை நன்றாக ஆறவிடவும் பின் ஆறியதும் இவ்வாறு இருக்கும் இப்போது சற்று அழுத்தி பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் உருட்டும் போது சற்று அழுத்தி பிசைந்து உருட்டி கொள்ளவும் அப்போது தான் உடையாமல் இருக்கும்

  4. 4

    ஜாமூன் செய்ய: நெய் உடன் சோடா உப்பு சேர்த்து நன்கு குலைத்து கொள்ளவும் பின் கோவாவை உதிர்த்து சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் ஏலக்காய் விதை மட்டும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக மைதா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் தண்ணீரை ஊற்ற வேண்டாம் எல்லாம் சேர்த்து அழுத்தி பிசைந்து கொள்ளவும் பின் கைகளில் மட்டும் சிறிது தண்ணீர் தொட்டு பிசைந்தால் அந்த ஈரத்திலே மாவு சேர்ந்து வரும் 1 ஸ்பூன் வீதம் மட்டும் தெளிக்கவும் பின் நன்கு பிசைந்து 20 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்

  5. 5

    பின் சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் மிதமான சூட்டில் நெய் விட்டு சூடானதும் (அதிக சூடு இருக்க கூடாது) உருண்டைகளை ஒவ்வொன்றாக போடவும் நெய் மற்றும் எண்ணெய் கலந்து விடலாம் முழுவதும் நெய் விட்டும் பொரிக்கலாம் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  6. 6

    பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் ஏலக்காய் சேர்த்து அரை கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கவும் சூடா இருக்கும் பாகில் வெதுவெதுப்பான உருண்டைகளை போட்டு 4 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தனித்தனியாக ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் எடுத்து தட்டில் அடுக்கவும்

  7. 7

    பின் 2 _3 மணி நேரம் உலர விடவும் பின் மேலே க்ரீம் (வெண்ணெய் உடன் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு பீட் செய்து வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்து பிரிட்ஜில் குளிர விடவும்) வைத்து செர்ரி 🍒 வைத்து அலங்கரித்து பரிமாறவும்

  8. 8

    பாதாம் கத்லி செய்ய பாதாமை வெதுவெதுப்பான நீர் ஊற்றி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தோலை நீக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்

  9. 9

    பின் வாணலியில் கோவாவை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் அரைத்த பாதாம் சேர்த்து நன்கு கிளறவும் மெல்லிய தீயில் 5 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி வேகவிடவும்

  10. 10

    பாதாம் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் சர்க்கரை கரைந்து இளகி பின் சேர்ந்து வரும் பாதாம் கலவை சற்று திக்கானதும் நெய் விட்டு நன்றாக கிளறவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  11. 11

    பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை நன்றாக கிளறி இறக்கவும் பின் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி மேலே நட்ஸ் தூவி அழுத்தி விடவும் பின் இரண்டு மணி நேரம் வரை செட் ஆக விடவும்

  12. 12

    பின் டைமண்ட் ஷேப் ல் கட் செய்து கொள்ளவும் சுவையான ஆரோக்கியமான மணமான பாதாம் கத்லி ரெடி

  13. 13

    ஜிலேபி செய்ய உளுந்து மற்றும் அரிசியை தனித்தனியாக மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும் எடுப்பதற்கு முன் கூட கார்ன்ப்ளார் மற்றும் ஆரஞ்சு புட் கலர் சேர்த்து நன்கு ஒரு முறை அரைத்து எடுக்கவும்

  14. 14

    பின் பாலீதீன் கவரில் மாவை நிரப்பி மேலே நன்கு கட்டிக் கொள்ளவும் பின் அடியில் ஒரு நுனியில் சின்னதாக துளை இடவும் பின் சூடான எண்ணெயில் பிழிந்து விடவும்

  15. 15

    இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும் சர்க்கரை உடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அரை கம்பி பதம் வந்ததும் லெமன் சாறு விட்டு ஏலத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும் பின் ஜிலேபி சுடச் சுட எடுத்து சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் வரை திருப்பி விட்டு ஊறவைத்து எடுக்கவும்

  16. 16

    சர்க்கரை பாகு இளஞ்சூட்டில் இருந்தால் போதும் ஜிலேபி சூடா எண்ணெயில் இருந்து எடுத்து பாகில் போடவும் ஒரு நிமிடம் கழித்து திருப்பி விடவும் பின் இன்னொரு நிமிடம் கழித்து எடுத்து தட்டில் வைக்கவும் சுவையான ஆரோக்கியமான ஜிலேபி ரெடி

  17. 17

    தேங்காய் பர்பி செய்ய: சர்க்கரை உடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்

  18. 18

    பின் தேங்காய் சர்க்கரை பாகுடன் சேர்ந்து வந்ததும் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு கிளறவும்

  19. 19

    பாத்திரத்தில் ஒட்டாமல் அடியில் வெளுத்து நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி அரை மணி நேரம் வரை ஆறவிட்டு பின் துண்டுகள் போடவும்

  20. 20

    கலர் ஃபுல் ஆ ஸ்வீட் ரெடி இது நமது பாரம்பரிய இனிப்பு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes