*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#TheChefStory #ATW3 Indian Curries
வெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும்.

*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)

#TheChefStory #ATW3 Indian Curries
வெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 250 கிவெண்டைக்காய்
  2. 2மீடியம் சைஸ் வெங்காயம்
  3. 2தக்காளி சிறியது
  4. 1/2 கப்புளிப்பில்லாத கெட்டி தயிர்
  5. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  6. 2 ஸ்பூன்தனி மி.தூள்
  7. 1 ஸ்பூன்தனியா தூள்
  8. 1/2 டீ ஸ்பூன்கரம் மசாலா தூள்
  9. 1 ஸ்பூன்தாளிக்க:- கடுகு
  10. 1 ஸ்பூன்உ.பருப்பு
  11. 1 ஸ்பூன்சீரகம்
  12. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  13. 1 டேபிள் ஸ்பூன்ப.மிளகாய், இஞ்சி, பூண்டு விழுத்
  14. 11/2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  15. 1 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை
  16. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  17. 2 ஸ்பூன்அலங்கரிக்க:- கறிவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கினது
  18. 1 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வெண்டைக்காயை சுத்தம் செய்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.தக்காளியை பொடியாக நறுக்கவும்.தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை மீடியத்தில் வைத்து, 1 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய், காய்ந்ததும், வெண்டைக்காய், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் ஒரு தட்டில் எடுக்கவும்.அடுப்பை சிறிய தீயில் வைத்து மீதமுள்ள எண்ணெயில் மேலும்,1 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெடித்ததும், உ.பருப்பு போடவும்.

  4. 4

    உ.பருப்பு சிவந்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு வதங்கியதும், இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும், தனி மி.தூள்,தனியா தூள், உப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கினதும், வெண்டைக்காயை போடவும்.

  6. 6

    ஒன்று சேர வதங்கியதும், கரம் மசாலா தூள், நன்கு அடித்த தயிர், ஊற்றி 1டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து, 5 நிமிடம் கொதித்ததும்,அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    பிறகு பௌலுக்கு மாற்றி மேலே கொத்தமல்லி தழை, கறிவேப்பிலலயை, போடவும்.

  8. 8

    அனைத்தையும் நன்கு கலக்கவும். இப்போது, சுவையான, சுலபமான,* வெண்டைக்காய் கிரேவி* தயார். இது, சப்பாத்தி, தோசை, இட்லிக்கு ஆப்ட்டாக இருக்கும், சுடு சாதத்தில் நெய் விட்டும் சாப்பிடலாம்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes