* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#KK
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன்.

* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)

#KK
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
8 பேர்
  1. 1 லிஆவின் பால்
  2. 25 கி கஸ்டர்டு வெண்ணிலா பவுடர்(1பாக்கெட்)
  3. 10பிஸ்கெட்ஸ்
  4. 1 டம்ளர்சர்க்கரை
  5. 2 டேபிள் ஸ்பூன்காய்ச்சாத பால்
  6. 1 டேபிள் ஸ்பூன்உடைத்த முந்திரி
  7. 1 டேபிள் ஸ்பூன்அலங்கரிக்க:- உடைத்த முந்திரி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை ஒரு பௌலில் போட்டு, காய்ச்சாத பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, 1/4 பங்கு குறுக, காய்ச்சவும்.

  4. 4

    பிஸ்கெட்டை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்யவும். முந்திரியை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை சிறு தீயில் வைத்து, குறுகிய பாலை கடாயில் ஊற்றி, கரைத்த கஸ்டர்டு பவுடரை சேர்த்து, கட்டி தட்டாமல் கிளறவும்.

  6. 6

    சிறிது கெட்டியானதும், அரைத்த பிஸ்கெட் தூளை போடவும். பிறகு சர்க்கரை, போட்டு கரைந்ததும், 5 நிமிடம் கொதித்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே நறுக்கின முந்திரியை போட்டு இறக்கினதும், பௌலுக்கு மாற்றி, 8 மணி நேரம் ஃபிரீஸரில் வைக்கவும்.

  7. 7

    பின் ஃபிரீஸரில் இருந்து எடுத்து மேலே நறுக்கின முந்திரியை போட்டு அலங்கரிக்கவும்.

  8. 8

    இப்போது, சுவையான, சுலபமான, *கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்க்ரீம்* தயார். இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்து, பார்த்து, குழந்தைகளுடன், என்ஜாய், செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes