இதய வடிவில்,*ரவா கிச்சடி*(rava kichdi recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#HH
இந்த தினத்தின் ஸ்பெஷல், ஒருவருக்கு ஒருவர் செலுத்துகின்ற அன்பின் வெளிப்பாடு. எனவே அனைவருக்குமே இந்த தினம் முக்கியமான தினமாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 250 கிவறுத்த ரவை
  2. 1/4 பகுதிப.குடமிளகாய்
  3. 1மீடியம் சைஸ் தக்காளி
  4. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  5. ருசிக்குஉப்பு
  6. தாளிக்க:-
  7. 1 டீ ஸ்பூன்கடுகு
  8. 3/4 ஸ்பூன்உ.பருப்பு
  9. 3ப.மிளகாய்
  10. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  11. 2 டீ ஸ்பூன்பெருங்காயத்தூள்
  12. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  13. தேவையான அளவுதண்ணீர்
  14. அலங்கரிக்க:- நறுக்கின தக்காளி துண்டுகள்,நெய் 1 ஸ்பூன்,ப.மிளகாய்1

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.

  3. 3

    குடமிளகாய், தக்காளி, இரண்டையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு,உ.பருப்பு, ப.மிளகாய் தாளிக்கவும்.

  5. 5

    தாளித்ததும், குடமிளகாய், தக்காளி இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    பிறகு தேவையான, உப்பு, கறிவேப்பிலை,தண்ணீர் விட்டு நன்கு கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவையை போட்டு கட்டியில்லாமல் கிளறி, அடுப்பை நிறுத்தி விட்டு மேலே, 1 ஸ்பூன் நெய் விட்டு, கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

  7. 7

    பிறகு ஆர்ட்டின் வடிவில் இருக்கும் தட்டிற்கு மாற்றவும்.

  8. 8

    பிறகு தட்டை சுற்றி, தக்காளி துண்டுகளை இதய வடிவத்திலும், ப.மிளகாயை நடுவிலும், வைக்கவும்.இப்போது, சுவையான, சுலபமான,*ரவா கிச்சடி*தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes