அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#book my mom special

அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)

#book my mom special

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1கப்வேர்க்கடலை [ஊறவைத்து வேகவைத்த}
  2. 1தேக்கரண்டிஅரிசி
  3. 1தேக்கரண்டிதுவரம்பருப்பு
  4. 1மேஜைக்கரண்டிதனியா
  5. 1தேக்கரண்டிமிளகு
  6. 1/2 தேக்கரண்டிசீரகம்
  7. 5காய்ந்த மிளகாய்
  8. 3 பத்தைதேங்காய்
  9. 15சின்ன வெங்காயம்
  10. 1தக்காளி
  11. சிறிதளவுபுளி
  12. உப்பு
  13. 1/2 தேக்கரண்டிமஞ்சள்தூள்
  14. 1தேக்கரண்டிகடுகு
  15. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் சூடு ஏறியதும் அரிசி, துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், நான்கு சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஐந்து மணி நேரம் ஊற வைத்த வேர்க்கடலையை குக்கரில் 8 விசில் விட்டு நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

  4. 4

    நன்கு கொதி வந்தவுடன் வேகவைத்த வேர்க்கடலை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு. அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்

  5. 5

    கரைத்த புளியை சேர்த்து கொதிவந்ததும் கொத்தமல்லி இலை தூவினால் சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி. வேண்டுமெனில் இதில் கத்திரிக்காய் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes