கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

  கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. களிக்கு மாவரைக்க :
  2. ஒரு கிலோ உளுந்து
  3. கால் கப் பச்சரிசி
  4. களி செய்ய:
  5. ஒரு கப் உளுந்து மாவு
  6. அரைக்கப் கருப்பட்டி
  7. கால் கப் நல்லெண்ணெய்
  8. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் களிக்கு உளுந்து மாவு அரைக்க ஒரு கிலோ உளுந்தை தனியாக நன்கு வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும் பிறகு தனியாக பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும் இரண்டையும் கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும் இந்த மாவிலிருந்து தேவையான அளவு எடுத்து அவ்வப்போது செய்து கொள்ளலாம்

  2. 2

    ஒரு வாணலியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும் லேசான கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை ஒரு கப் எடுத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து கொள்ளவும் இப்பொழுது கொதிக்கும் சூடான தண்ணீரில் உளுந்து அரைத்ததை சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கிளறவும்

  3. 3

    வேறொரு பாத்திரத்தில் அரை கப் கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் கருப்பட்டி கட்டியில்லாமல் கரைந்த பிறகு கிளறிய உளுந்து களியில் வடிகட்டி சேர்க்கவும்(ஏனெனில் இதில் மண் குப்பை கல் ஏதேனும் இருக்கும்)

  4. 4

    உளுந்து கறியுடன் கருப்பட்டி பாகு சேர்த்து கலந்து நன்கு வெந்தவுடன் நல்லெண்ணெய் சேர்க்கவும்

  5. 5

    நல்லெண்ணெய் சேர்த்து உளுந்து கறியுடன் கலந்தவுடன் இறக்கவும்

  6. 6

    இப்பொழுது சுவையான சத்துக்கள் நிறைந்த கருப்பட்டி உளுந்து களி தயார்😋😋😋

  7. 7

    குறிப்பு.
    1.உளுந்தில் புரோட்டின் சத்து உள்ளது. 2. நல்லெண்ணெய் கால்சியம்,மினரல் சத்துகள் உள்ளன இவை எலும்புகளுக்கு மிகவும் வலு கொடுக்கும். 3. கருப்பட்டியில் விட்டமின் பி,இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes