#cookwithfriends பன்னீர் கிரேவி

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக...

#cookwithfriends பன்னீர் கிரேவி

நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடாம்
3 பரிமாறுவது
  1. 250கி பன்னீர்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/2 குடை மிளகாய்
  5. 1தே.கரண்டி மிளகாய்தூள்
  6. 1தே.கரண்டி மல்லி தூள்
  7. 1/2தே.கரண்டி கரம் மசாலா
  8. 3 முந்திரி பருப்பு
  9. 1மே.கரண்டி வெண்ணெய்
  10. 1/2தே.கரண்டி கஸ்தூரி மீத்தி

சமையல் குறிப்புகள்

40நிமிடாம்
  1. 1

    பன்னீர் மேல் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு சிறிது சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு பேனில் 2 மே. கரண்டிஎண்ணெய் ஊற்றி பன்னீரை பொரித்து எடுக்கவும்.

  3. 3

    அதே பேனில் வெங்காயம்,முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் 2 மே.கரண்டி,வெண்ணெய் 1 மே.கரண்டி சேர்த்து பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து வதக்கி வெங்காய,குடைமிளகாய் கண்டங்களை சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.இதனுடன் வெங்காயம் அரைத்ததை சேர்த்து வதக்கவும்

  5. 5

    வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  6. 6

    நன்கு வதங்கிய பின் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் பொரித்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட்டு கஸ்தூரி மித்தி சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes