பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4
# week 3
Dosa
குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை.

பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)

#GA4
# week 3
Dosa
குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4-5 மணி நேரம்
4 பேர்
  1. 1/4 ஆழாக்கு பச்சரிசி
  2. 1/2 ஆழாக்குபுழுங்கல் அரிசி
  3. 80கி துவரம் பருப்பு
  4. 1/4ஆழாக்கு கடலைப்பருப்பு
  5. 1/4ஆழாக்கு உளுந்தம் பருப்பு
  6. 1 ஸ்பூன் பாசிப்பருப்பு
  7. 1 ஸ்பூன் ஜவ்வரிசி
  8. 15 சின்ன வெங்காயம்
  9. 1/4 முடி துருவின தேங்காய்
  10. கருவேப்பிலை கொத்தமல்லி கொஞ்சம்
  11. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. 1 டீஸ்பூன் சோம்பு
  15. 1 டீஸ்பூன் சீரகம்
  16. 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  17. 7காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

4-5 மணி நேரம்
  1. 1

    எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அத்துடன் வரமிளகாய் சோம்பு சீரகம் சேர்த்து ஊற போடவும்.

  2. 2

    மிக்ஸியில் அரைக்கும் போது சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.

  3. 3

    சின்ன வெங்காயம் கொத்தமல்லி கருவேப்பிலை மூன்றையும் நைஸாக கட் பண்ணி சேர்க்கவும் தேங்காயை சேர்க்கவும். தோசை மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்

  4. 4

    தோசை தவாவை சூடு செய்து ஒரு கரண்டி மாவை ஊற்றி சற்று மெலிதாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வெந்த பின் எடுக்கவும்.

  5. 5

    இதற்கு தொட்டுக்கொள்ள இட்லிபொடி அருமையாக இருக்கும் சுடச்சுட சாப்பிட சூப்பரான இந்த அடை தோசை நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Top Search in

Similar Recipes