காரசாரமான மிக்சர்

மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடக்கூடிய பலகாரம் இது.மேலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பாரம்பரியமாக செய்யப்படுவதாகும்.
காரசாரமான மிக்சர்
மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடக்கூடிய பலகாரம் இது.மேலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பாரம்பரியமாக செய்யப்படுவதாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில், கொடுக்கப்பட்ட அளவுகளில் கடலை மாவு அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 2
இதனோடு மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,இட்லி சோடா மற்றும் உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
- 3
இந்த கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதனை மூடி வைக்கவும்
- 4
சிறு பல் கொண்ட பூண்டை தோலுடன் தட்டி எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். இதனை ஒரு வடி பாத்திரத்தில் போட்டு வைக்கவும். கருவேப்பிலையை நன்கு கழுவி துணியால் துடைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 5
அதன்பின் வேர்க்கடலை, பொட்டுக்கடலை மற்றும் பாதம் இவற்றை சிவக்க பொரித்து, எண்ணையை வடித்து வடி பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
- 6
அதன்பின் கார்ன் ஃப்ளேக்ஸ் மற்றும் அவல் இவற்றை பொரித்து எடுக்கவும்.
- 7
கடையில் மிக்சர் அவல் என்று கேட்டு வாங்கவும். முறுக்குக் குழாயில் ஓமப்பொடி அச்சில் போட்டு மாவை எண்ணை தொட்டு குழாயில் வைத்து மூடவும்.
- 8
சூடான எண்ணெயில் ஓமப்பொடி பொரித்து எடுக்கவும். முக்கால் பங்கு மாவில் ஓமப்பொடி போட்டுக் கொள்ளவும். இறுதியில் முறுக்கு குழாயில் ஒட்டியிருக்கும் மாவை எடுத்து கிண்ணத்தில் உள்ள கால்பங்கு மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- 9
இதனை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.இப்பொழுது பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி சூடான எண்ணையில் படத்தில் காட்டியுள்ளபடி பூந்தி போட்டுக் கொள்ளவும். பூந்தி கரண்டியின் மீது 2 குழிக்கரண்டி மாவை சேர்த்து தேய்த்து விட்டால், காராபூந்தி முத்துமுத்தாக எண்ணெயில் விழும்.
- 10
காராபூந்தி மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.இரண்டாம் முறை பூந்தி போடுவதற்கு முன் கரண்டியின் பின்பக்கம் கைகளால் சுத்தமாக துடைத்து எடுக்கவும். அதன்பின் பூந்தி போட்டால் மாவின் இறுதி வரைக்கும் பூந்தி முத்து முத்தாக விழும். (ஒவ்வொரு முறை பூந்தி போடும்போதும் கரண்டியின் பின்பக்கம் துடைத்து எடுக்கவும்)
- 11
பொரித்து எடுத்து அனைத்தையும் எடுத்து வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் பொரித்த ஓமப் பொடியை சேர்த்து உடைத்து விடவும். இதனோடு பொரித்து பூந்தியை சேர்க்கவும்.
- 12
ஒன்றன் பின் ஒன்றாக பொரித்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 13
இதனோடு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் 750 கிராம் மிக்சர் கிடைக்கும்.
- 14
காரசாரமான மாலை நேர சிற்றுண்டி மற்றும் தீபாவளி பலகாரம் மிக்சர் தயார்.
Similar Recipes
-
சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)
வீட்டிலேயே சுவையான ஹல்த்தியான மிக்சர் இனி செய்யலாம்#hotel#new#snacks#homemade#goldenapron3 Sharanya -
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது. Asma Parveen -
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
-
-
மூண்டால் சாகோ மிக்ஸர் (Moong dal sago mixture recipe in tamil)
#kids1#deepavaliதீபாவளி பலகாரங்களில் கார வகைகளில் முறுக்கு மிச்சர் முதலிடம் பிடிக்கும் ஒரு சுலபமான புதுமையான பியானோ மிக்சர் இந்த தீபாவளிக்காக தயாரித்தேன் அனைவரும் பாராட்டினார்கள். Santhi Chowthri -
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
மிக்சர்
மிக்சர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று . அதை கடையில் வாங்காமல் இப்படி வீட்டில் சுலபமாக செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
காரபூந்தி மிக்சர் (Kaara poonthi mixture recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். சாம்பார் சாதம், ரசம் சாதம்த்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.#snacks Sundari Mani -
-
புட்டமுது
#steamதிருச்செந்தூர் முருகன் கோவிலில் புட்டமுது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் புட்டமுதை பண்டிகை நாட்களில் செய்து இறைவனுக்குப் படைத்து இறைவன் அருள் பெறலாம். Natchiyar Sivasailam -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
வெள்ளையப்பம்
மதுரை, காரைக்குடி மாவட்ட மக்கள் செய்யும் ஒரு சுவை மிக்க சிற்றுண்டி. அடி பகுதி பொன்னிறத்தில் மொரு மொரு என்றும், மேல் பகுதி வெள்ளையாக, பஞ்சு போல் மிருதுவாகவும் இருக்கும். Subhashni Venkatesh -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
சஜ்ஜப்பா (சொஜ்ஜியப்பம்) (Sajjappa recipe in tamil)
கர்நாடகாவில் நவராதரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்கிறார்கள். பாட்டி சொஜ்ஜியப்பம் என்று சொல்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ருசித்திருக்கிறேன். இன்றுதான் முதலில் செய்கிறேன் நல்ல ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
-
-
-
More Recipes
கமெண்ட்