பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#Grand2
விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள்.

பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)

#Grand2
விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
2 பேர்
  1. 2 கப் பழுத்த பப்பாளி பழத்துண்டுகள்
  2. ஒரு கப் சர்க்கரை
  3. 5 டேபிள்ஸ்பூன் நெய்
  4. 2 டீஸ்பூன் கோதுமை மாவு
  5. 10 முந்திரி
  6. மூன்று ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    பப்பாளி துண்டுகளை குழி கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியை சூடாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரிகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு மசித்த பப்பாளி பழக்கூழை சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு மீதியுள்ள நெய்யையும் சர்க்கரையும் சேர்த்து வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

  4. 4

    வறுத்து வைத்துள்ள முந்திரிகளால் அலங்கரித்து சூடாக பப்பாளி அல்வாவை பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes