எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1/2 கப் மைதா
  2. 1/4 கப் ரவை
  3. உப்பு
  4. தண்ணீர்
  5. சிட்டிகை சோடா உப்பு
  6. 1மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
  7. 1 தேக்கரண்டியளவு மிளகாய் தூள்
  8. வெங்காயம்
  9. நெல்லிக்காய் அளவுபுளி
  10. 1கைப்பிடி கொத்தமல்லி இலை
  11. 1 கைப்பிடி புதினா
  12. சிறியதுண்டு இஞ்சி
  13. 1 பச்சை மிளகாய்
  14. சிட்டிகை சாட் மசாலா
  15. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மைதா ரவை உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    10 நிமிடம் ஊற வைக்கவும். சப்பாத்தி கல்லில் வட்டமாக விரித்து சிறிய மூடியை கொண்டு பூரி வடிவில் எடுத்து எண்ணெய் காயவிட்டு பொறித்து எடுக்கவும்.

  3. 3

    உருளைக்கிழங்கு ஐ குக்கரில் 2 விசிலுக்கு வேக வைக்கவும்

  4. 4

    வெந்ததும் நன்றாக மசித்து அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் வெங்காயம் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    புளி ஐ ஊற வைக்கவும் புளி தண்ணீர் எடுத்து கொள்ளவும்.

  6. 6

    கொத்தமல்லி இலை புதினா இஞ்சி மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து புளி தண்ணீர் உடன் சேர்ந்து உப்பு, சாட் மசாலா கலந்து கொள்ளவும்.

  7. 7

    பூரிக்குள் உருளைக்கிழங்கு மசாலா வை வைத்து புளி தண்ணீரில் டிப் செய்து சாப்பிடலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes