Empty salna Recipe in tamil

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#Everyday3
கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்

Empty salna Recipe in tamil

#Everyday3
கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. மசாலா அரைக்க
  2. 1 ஸ்பூன் சீரகம், சோம்பு
  3. 1/4 ஸ்பூன் மிளகு
  4. 1பட்டை, கிராம்பு ஏலக்காய் அன்னாசி மொக்கு
  5. 20 சின்ன வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. அரைக்க
  8. 1/2 கப்பு தேங்காய்
  9. 15 முந்திரி
  10. 2 ஸ்பூன் கசகசா
  11. தாளிக்க
  12. 1 கப்பு எண்ணெய்
  13. 1பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  14. 1/2 ஸ்பூன் சோம்பு, சீரகம்
  15. 3 பெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது
  16. 2 தக்காளி நீளமாக வெட்டியது
  17. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  18. 1 ஸ்பூன் வரமிளகாய் தூள்
  19. 2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  20. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  21. 1 ஸ்பூன் சீரகத்தூள்
  22. 1 ஸ்பூன் கரமசாலா தூள்
  23. தேவையான அளவுஉப்பு
  24. 1 பிடி புதினா
  25. 2பிடி கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி மொக்கு மிளகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை பட்டை கிராம்பு சோம்பு சேர்த்து வதக்கவும் பின்னர் பெரிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

  4. 4

    இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் வரமிளகாய் தூள் கொத்தமல்லி தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின்னர் புதினா கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    மிக்ஸியில் தேங்காய் முந்திரி கசகசா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  7. 7

    சிறிது கரமசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  8. 8

    எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

  9. 9

    சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் கெட்டி சால்னா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes