ஆட்டுக்கால் பாயா

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

ஆட்டுக்கால் பாயா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2ஆட்டின் கால்கள்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 2நாட்டுத்தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு
  5. 3ஏலக்காய் 1 ந.பூ 3 கிராம்பு 2 பட்டை
  6. 2 சில் தேங்காய், 10 முந்திரி பருப்பு
  7. காரத்திற்கேற்பமஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா
  8. தேவையான அளவுமட்டன் மசாலா, மல்லித்தூள்
  9. தேவையான அளவு தண்ணீர், எண்ணெய், உப்பு, மல்லிஇலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் ஆட்டின் கால்களை வெட்டிக் கொண்டு சுத்தமாக கழுவிக் கொண்டு ஒருக்குக்கரீல் கிராம்பு, சோம்புச் சேர்க்கவும்

  3. 3

    பின் தேவையான அளவு தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் உப்புப் போட்டு குக்கரை மூடி 10 விசில் வரைவிட்டு இறக்கவும் நன்றாக வெந்து விட்டது

  4. 4

    பின் ஒரு ஜாரில் தேங்காய்ச் சில் மற்றும் முந்திரி,சோம்புச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    அரைத்து பாலாக எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    குக்கரீல் குறைவாக அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பின் சின்ன வெங்காயத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும்

  7. 7

    பின் தக்காளி மற்றும் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும்

  8. 8

    பச்சை வாசனைப் போனதும் மஞ்சள், மல்லி, கரம்மசாலாச் சேர்க்கவும்

  9. 9

    பின் மட்டன் மசாலா, மியகாய்த்தூள்ச் சேர்த்து வதக்கவும் பிறகு அவித்து வைத்து இருந்த கால்களை தண்ணீருடன் சேர்க்கவும்

  10. 10

    சேர்த்ததும் கிளரி விட்டுக் கொள்ளவும் சூப் மற்றும் மசாலாவை கலந்து விட வேண்டும்

  11. 11

    பின் உப்பு காரம் சேர்த்துக் கொண்டு குக்கரை மூடி 5 விசில் வரை வைக்கவும்

  12. 12

    பின் விசில் போனதும் திறந்து அரைத்து வைத்து இருந்த தேங்காய் முந்திரிப்பாலை சேர்க்கவும் பின் ஒருக் கொதி விட்டு இறக்கவும்

  13. 13

    கொத்தமல்லி இலை தூவி விட்டு பின் பரிமாறவும் மிகவும் சுவையாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes