நிலக்கடலை குழம்பு

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

நிலக்கடலை குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 150 கி நிலக்கடலை
  2. 2 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 தேங்காய்ச்சில்
  5. 1/2 ஸ்பூன் மிளகு, சீரகம், 1 ஸ்பூன் சோம்பு, கடுகு
  6. 2பட்டை, ஏலக்காய், கிராம்பு
  7. 1ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  8. கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, மல்லி இலை
  9. தேவையான அளவு எண்ணெய், தண்ணீர், உப்பு
  10. 1/2 pinch மஞ்சள்த்தூள்
  11. 2 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் மசாலா தயார்ச் செய்யலாம் 2 தேங்காய்சில், 1/2ஸ்பூன் மிளகு, சீரகம்,சோம்பு, 2 பட்டை, ஏலக்காய், கிராம்புச் சேர்த்து மிக்ஸி ஜாரில் தண்ணீர்ச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் 150 கி நிலக்கடலையை ஒரு முறை கருகாமல் வறுத்து தோலை நீக்கி விடவும் பின் குக்கரீல் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து உப்பு அளவாகச் சேர்த்து 5 விசில் வரை வைக்கவும்

  4. 4

    பின் இறக்கி பார்த்தால் நிலக்கடலை வெந்து பெரிதாக இருக்கும்

  5. 5

    பிறகு ஒருக் கடாயில் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் கடுகு, சோம்பு, 2 பெரிய வெங்காயத்தை மிக சிறிதாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு வதக்கவும்

  6. 6

    பின் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி விடவும் வதங்கியதும் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின்பு 1 தக்காளி சிறிதாக நறுக்கியதைச் சேர்த்துக் கொள்ளவும்

  8. 8

    பிறகு அனைத்தும் நன்றாக வதங்கியதும் 1/2 pinch மஞ்சள்த்தூள்,2 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கியதும் சிறிதளவு தண்ணீரச் சேர்த்து ஒருக் கொதி வந்ததும்

  9. 9

    அரைத்து வைத்திருந்த தேங்காய் மசாலாக் கலவலயைச் சேர்த்துக் கொள்ளவும் அதுவும் ஒருக் கொதி வந்ததும் அவித்து வைத்த நிலக்கடலையை அதை வேக வைத்த தண்ணீருடன்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  10. 10

    பின் தேவைப்பட்டால் உப்புச் சேர்த்து கொதிக்க விடவும்

  11. 11

    நமக்கு தேவையான நிலக்கடலைக் குழம்பு தயார் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Yummy
If you like my recipes please like and comment and follow me😊😊

Similar Recipes